தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.
நம் வீட்டிலேயே மாடியில், பால்கனியில், கிடைக்கும் சின்ன இடத்தில் தோட்டம் போடுவது மனதுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன், ஆரோக்கியமான உணவையும் தரும்.
அந்தவகையில் பச்சை மிளகாயை நீங்கள் வீட்டில் எளிதாக வளர்க்கலாம். பச்சை மிளகாய் ஈரப்பதம் மற்றும் சூடான காலநிலையில் நன்றாக வளரும்.
வீட்டில் பச்சை மிளகாய் வளர்ப்பது எப்படி என்பது இங்கே
மிளகாயை வளர்க்க பகுதி நிழலுடன் கூடிய வெயில் படும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தோட்டத்தில் வளர்ப்பதை விட சிறிய தொட்டியில் மிளகாய் வளர்ப்பது இன்னும் எளிதானது. சரியான வடிகால் துளைகளுடன் சுமார் 3-4 அங்குல ஆழமான தொட்டியை தேர்ந்தெடுக்கவும். நல்ல தரமான விதைகளை எடுத்து தொட்டியில் 1 அங்குல ஆழத்தில் நடவும்.
தினசரி சூரிய ஒளி சுமார் 5-6 மணி நேரம் கிடைக்கும் இடத்தில் பானையை வைக்கவும். தொடர் கவனிப்பு மற்றும் நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் உங்கள் மிளகாய் விதைத்த 50-60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“