நீங்கள் தோட்டக்கலைக்கு புதியவராக இருந்தால் அற்புதமான மகசூலைப் பெறுவதற்கு சில அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தர்பூசணி எப்படி எளிதாக வளர்க்கலாம் என்பது இங்கே.
தர்பூசணிக்கு 18°C முதல் 35 °C (64 °F – 95 °F) வரை வெப்பநிலையும், சூரிய ஒளியும் அதிகம் தேவை. லேசான உறைபனி கூட பழத்தின் திசுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். குளிர்காலத்தின் பிற்பகுதி, வெப்பமண்டல காலநிலையில் தர்பூசணி விதைக்க சிறந்த காலமாகும். இந்தியாவில், இது வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வெப்பநிலையைப் பொறுத்து தொடங்குகிறது.
மனதில் கொள்ள வேண்டியது இங்கே
மண்: தர்பூசணிக்கு அதிக வடிகால் மற்றும் 6 முதல் 7.5 வரையிலான pH வரம்புடன் கூடிய மண் தேவைப்படுகிறது, ஏனெனில் அவை சற்று அமிலத்தன்மையை விரும்புகின்றன. மணல் (Sandy loam soil) அவற்றுக்கு சிறந்தது, கருப்பு மண்ணிலும் வளர்க்கலாம், ஏனெனில் தர்பூசணி கொடிகள் பூஞ்சையால் பிடிக்க வாய்ப்புள்ளது.
போதுமான சூரிய ஒளி: இவை வளர நேரடி சூரிய ஒளி நிறைய தேவை. 6-8 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட முழு சூரிய ஒளி சிறந்தது. சூரிய ஒளியின் பற்றாக்குறை பழத்தின் அளவு மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
தண்ணீர்: தர்பூசணிக்கு நீர்ப்பாசனம் செய்வது சில நேரங்களில் தந்திரமானது. குறிப்பாக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் அவற்றுக்கு நிலையான நீர் தேவைப்படுகிறது. எப்பொழுதும் மண்ணை நன்கு ஈரமாக வைக்கவும், ஆனால் ஒரு ஹோஸ் மூலம் தாவரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டாம். வேரில் இருந்து தண்ணீர் ஊற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள் பழுக்க வைக்கும் போது, சுவையை அதிகரிக்க நீர்ப்பாசனத்தை குறைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/XQg9ieOmeXy68KpDSezv.jpg)
உரம் மற்றும் பூஞ்சைக் கொல்லி: தர்பூசணி கொடிகள் கிளைத்து பூக்கத் தொடங்கும் போது நைட்ரஜன் அடிப்படையிலான உரங்கள் விரும்பப்படுகின்றன. அதிக பழங்கள் உற்பத்திக்கு பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அடிப்படையிலான உரத்திற்கு மாறவும். இலைகள் உரத்துடன் தொடர்பு கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் அவை சேதமடையும்.
முதல் பழம் ஏன் உடனடியாக அகற்றப்பட வேண்டும்?
இது பெரும்பாலான ஊட்டச்சத்தை உறிஞ்சுகிறது மற்றும் அதிக பழங்களை உற்பத்தி செய்வதில் தடைகளை உருவாக்குகிறது. ஊட்டச்சத்து கழிவுகளை குறைக்க முதல் பழத்தை அகற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி செய்தால் ஒரு கொடிக்கு 2-4 தர்பூசணி அறுவடை செய்யலாம்.
அதை அகற்றிய பிறகு, செடியின் அடிப்பகுதியில் இருந்து மண்ணில் 7 செமீ நீளத்துக்கு குழி தோண்ட வேண்டும். அதில், இரண்டு ஸ்பூன் அளவு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கொண்ட சத்து நிறைந்த உரம், தாவர வளர்ச்சிக்கு போடப்படுகிறது.
கூடுதலாக, கத்தரித்து பார்த்துக்கொள்ளவும். தர்பூசணி கொடிகளுக்கு பக்கவாட்டு கிளைகள் மற்றும் பழைய இலைகளுக்கு வழக்கமான சீரமைப்பு தேவைப்படுகிறது, இதனால் அவை முக்கிய தண்டுகளுக்கு அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை அனுப்ப முடியும். இந்த வழியில் தாவரங்கள் கட்டுப்படுத்தப்படும் மற்றும் நிர்வகிக்க எளிதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“