தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.
Advertisment
தாவரங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டம் அவசியம். இதற்கான உரத்தைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
வீட்டிலேயே செலவில்லாமல் மண்புழு உரம் எப்படி தயாரிப்பது என்பது இங்கே.
ஒரு கலனில் அல்லது தொட்டியில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை போடவும். இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும்.
கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும். அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும்.
உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது. இதை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“