வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த எளிய வேம்பு பூச்சிக்கொல்லி, உங்கள் தோட்டத்தை பூச்சிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உங்கள் வீட்டில் தோட்டம் உள்ளதா? அப்படியானால், தாவரங்கள் வளரும்போது அதனுடன் சேர்ந்து தொல்லைதரும் பூச்சிகளும் வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதை நீங்கள் உணரும் முன்பே, இந்த பூச்சிகள் செடியை விழுங்கிவிட்டு, பட்டுபோக செய்துவிடும்.
இந்த சிக்கலைச் சமாளிக்க நீங்கள் இயற்கை வழிகளைத் தேடுகிறீர்களானால், இங்கே ஒரு எளிய தீர்வு உள்ளது.
வேம்பு அதன் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகிறது. இவை அனைத்தையும் தவிர, இது பூச்சி அச்சுறுத்தலைச் சமாளிக்க உதவும் பண்புகளையும் கொண்டுள்ளது. வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற கசப்பு வேதிப்பொருள் மற்றும் சலானின், மிலியன்டியால் போன்ற இதர பொருள்களும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன.
அதன் வலுவான கசப்பான சுவை மற்றும் கடுமையான வாசனையுடன், வேப்ப எண்ணெய் சாறு, தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை விரட்டுகிறது, அதே நேரத்தில் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.
சுமார் 10 -15 மில்லி வேப்ப எண்ணெயை, சில துளிகள் சோப்பு லிக்குவட் மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். இதன் விளைவு ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும்.
முதலில் உங்கள் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை அடையாளம் கண்டு, கண்காணியுங்கள். பொதுவாக, பூச்சியிலிருந்து விடுபட தாவரத்தின் இலை அல்லது தண்டு போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றலாம். ஆனால் தாக்குதல் தொடர்ந்தால், அதை அகற்றுவது சிறந்தது. பூச்சிகள் வராமல் இருக்க பத்து நாட்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
வேர் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க நடவு செய்யும் போது வேப்பம்பூவை மண்ணில் சேர்க்கலாம்.
வீட்டிலேயே வேம்பு பூச்சிக்கொல்லி எப்படி தயாரிப்பது?
தேவையானவை
ஸ்ப்ரே பாட்டில்
பூண்டு பற்கள்
பச்சை மிளகாய்
வேப்ப எண்ணெய் சாறு
வேகவைத்த அரிசி தண்ணீர்
சிறிய கல் உரல்
எப்படி செய்வது
சிறிய கல் உரலில், பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு இடிக்கவும்.
நன்றாக அரைத்ததும், அந்த விழுதை வேகவைத்த அரிசி தண்ணீரில் சேர்க்கவும்.
இந்தக் கலவையை நன்கு புளிக்க விடவும். நீங்கள் அதை ஓரிரு நாட்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு இரவு முழுவதும் விட்டுவிடலாம். புளித்த பிறகு, பூண்டு தோல்கள் மற்றும் மிளகாய் தோலை வெளியேற்ற, தண்ணீரை வடிகட்டவும்.
இந்த தண்ணீரில் 2-3 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட செடி/இலைகள் மீது தெளிக்கவும். பூச்சிகள் அல்லது நோய்த்தொற்றுகள் காணாமல் போகும் வரை, ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிப்பதைத் தொடரவும்.
நல்ல பலனைப் பார்க்க, குறைந்தது ஒரு வாரமாவது இதைத் தொடரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.