பசுமையான வீடு… ஃப்ரெஷ்ஷான காய்கறிகள்! மாடித்தோட்டம் சிம்பிள் வழிமுறைகள்

how to make terrace gardening and vegetable garden explained in tamil: மாடித்தோட்டம் அமைக்க உங்கள் வீட்டு மாடிகளில் உள்ள இடமே போதுமானது. அந்த இடத்தில் காய்கறி செடி கொடிகள், மற்றும் பூந்தோட்டங்களை அமைக்கலாம்.  

Gardening news in tamil how to make terrace gardening and vegetable garden
Gardening news in tamil how to make terrace gardening

Gardening news in tamil:    கிராமபுறங்களில் வசித்து வரும் மக்கள் நகரங்களிலும், பெருநகரங்களிலும் வசித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் கிராமதித்தில் உள்ள தங்கள் தோட்டங்கள் போல நகரங்களில் அமைக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்களில் சிலருக்கு தோட்டம் அமைப்பதற்கான இடம் கிடைக்கும், சிலருக்கு கிடைக்காது. ஆகவே தாங்கள் தங்கியிருக்கும் மாடிகளிலே தோட்டம் அமைக்கலாம் என முயற்சி செய்து வருவார்கள். ஆனால் மாடித்தோட்டம் எப்படி அமைப்பது, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள்.

நீங்களும் மாடித்தோட்டம் அமைக்க முயற்சி செய்ப்பவர்கள் என்றால், இது உங்களுக்கான குறிப்பு தான்.

மாடித் தோட்டம் அமைப்பதற்கான இடம்:

மாடித்தோட்டம் அமைக்க உங்கள் வீட்டு மாடிகளில் உள்ள இடமே போதுமானது. அந்த இடத்தில் காய்கறி செடி கொடிகள், மற்றும் பூந்தோட்டங்களை அமைக்கலாம்.  

மாடித் தோட்டம் எப்படி அமைப்பது?

உங்கள் வீட்டு மடியில் உள்ள காலியான இடம், படிக்கட்டு, பால்கேனி, போன்ற இடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். அதோடு மாடியில் தோட்டத்தின் கழிவு நீர் செல்லும் வகையில் இடத்தை தேர்வு செய்தல் வேண்டும். மற்றும் அவற்றுக்கு சூரிய ஒளி கிடைக்கும் வகையிலும் அமைத்திட வேண்டும்.

மாடித்தோட்டத்திற்கு செடிகளை எப்படி தேர்வு செய்வது?

மாடித் தோட்டத்தில் என்னென்ன செடிகளை பயிரிடலாம் என சிலர் ஏற்கனேவே முடிவு செய்து வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு அதுபற்றிய திட்டங்கள் இருக்காது. உங்கள் மாடித் தோட்டத்தில் அதிக இடம் இருந்தால், வரப்பு போன்று அமைத்து, அவற்றில் பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும் கீரை வகைகள் முதலியவற்றை பயிரிடலாம். 

உங்கள் வீட்டில் உள்ள பழைய கேன்களில் பழ மரங்ககளையும், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சிறிய தொட்டிகளில் சிறிய செடிகளையும்  பயிரிட்டு வளர்க்கலாம். அதோடு அவற்றில் கொடியில் வளரும் காய்கறிகளையும் பயிரிட்டு வீட்டின் சுவற்றிலோ, அல்லது பந்தல் போன்று அமைத்தோ படர விடலாம். 

உங்கள் வீட்டில் பூந்தொட்டிகள் இருந்தால் அவற்றில் உங்களுக்கு பிடித்த பூச்செடிகளை தேர்வு செய்து பயிரிடலாம். 

மாடித்தோட்டத்தில் எப்படி பயிரிடுவது?

மாடிகளில் செடிகள் நன்கு வளரக்கூடிய நல்ல மண்ணை தேர்வு செய்தல் வேண்டும். அவை கரிசல் மண்ணாகவோ, செம்மண் கலந்த கரிசல் மண்ணாகவோ இருக்கலாம். பின்னர் நீங்கள் செடிகளை பயிரிடும் இடத்தில் அல்லது தொட்டியில் தென்னை நார் கழிவு, மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு, மாட்டு எரு உரம் போன்றவற்றை செடிகளுக்கு அடியுரமாக கொடுக்கலாம்.தென்னை நார் கழிவு செடிகளுக்கு நல்ல ஈரப்பதத்தை தரும், மண்புழு, வேப்பம்புண்ணாக்கு, மற்றும் மாட்டு எரு உரம் செடிகளை பூச்சிகளிருந்து பாதுகாப்பதோடு, செடி வளர நன்கு உதவும். 

செடிகளை பயிரிட முடிவு செய்யும் முன்னர் இந்த கலவை நிறைந்த மண்ணை தொட்டிகளிலோ அல்லது பயிரிட திட்டமிட்ட இடத்திலோ 1 வாரத்திற்கு முன்பிருந்து  நீர் தெளித்து தயராக வைத்திருக்க வேண்டும். 

இப்போது மண் கலவையில் நுண்ணுயிர் பெருகி பயிரிட தயாராக இருக்கும். அந்த மண்ணில் நாம் பயிரிட முடிவு செய்துள்ள விதைளை நடவு செய்யலாம். நடவு செய்யும் போது கட்டை விரலால் நன்றாக ஆழப்படுத்தி விதையை இட வேண்டும். பின்னர் அதன் மேற்புறத்தில் மண்ணால் மூடி விட வேண்டும். 

நடவு செய்வதற்கான விதைகளை உங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தமிழக அரசின் தோட்டக்கலை துறையால் வழங்கப்படும் காய்கறி மற்றும் பூச்செடி விதைகளை பெற்று பயிரிடலாம். 

செடிகள் வளருவதற்கு தினமும் அல்லது ஒரு நாள் விட்டு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். செடிகள் நன்கு வளர அருகாமையில் கிடைக்கும் இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். அல்லது உங்கள் வீட்டில் கிடைக்கும், பழக் கழிவுகள், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை செடிகளின் அடியில் இட்டு வரலாம். 

செடியை பூச்சியிலிருந்து பாதுகாக்க வேப்பம்புண்ணாக்கு, வேப்ப இலையில் அரைக்கப்பட்ட பொடி ஆகியவற்றை செடிகளின் வேரில் இடலாம். இவை செடியை வேர்ப் பூச்சியிலிருந்து பாதுகாப்பதோடு, செடியின் இலைகள் தழைய நன்கு உதவும். 

மாடித்தோட்டத்தின் பயன்கள்:

உங்களுடைய வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பதால், இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை பறித்து உண்ணலாம். அதோடு மூலிகை செடிகளை வளர்ப்பதன் மூலம் இயற்கை மருத்துவத்தை பெறலாம். பசுமை நிறைந்த செடிகள் மாடியில் வளருவதால் உங்களுடைய வீடு குளிர்ச்சியாக இருக்கும். அதோடு சுத்தமான காற்றையும் சுவாசிக்கலாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gardening news in tamil how to make terrace gardening and vegetable garden

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com