மழைக்காலம் அமைதியாக உட்கார்ந்து இயற்கையை அனுபவிக்க சிறந்த நேரம். மாடித்தோட்டம் அமைப்பதற்கான சிறந்த சூழலும் மழைக்காலம்தான்.
மழைக் காலங்களில் உங்கள் தோட்டங்களில் செழித்து வளரக்கூடிய வெள்ளரி எப்படி நடவு செய்வது மற்றும் எப்படி வளர்ப்பது என்பது குறித்த விவரங்கள் இங்கே..
வெள்ளரிக்காய் தண்ணீர் மற்றும் சூரியனை விரும்பும் ஒரு சுலபமாக வளரக்கூடிய காய்கறியாகும். வெள்ளரி நிலையான நீர்ப்பாசனம் மற்றும் வெப்பத்தைப் பெறுவதால் அவை ஒரே நேரத்தில் அதிகமாக வளரும். இது கொடி தாவரம் என்பதால், சிறிய இடத்தில் கூட எளிதாக செழித்து வளரும்.
/indian-express-tamil/media/media_files/spZiEZWccfMz89fG7o7X.jpg)
வெள்ளரி எவ்வாறு வளர்ப்பது என்பது இங்கே:
போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஈரமான மற்றும் நன்கு நீர் வடிகட்டிய மண்ணில் வெள்ளரிகள் நன்றாக வளரும்.
வெள்ளரி விதைகளை 1 அங்குல ஆழத்திலும் 2-3 அங்குல இடைவெளியிலும் ஒரு வரிசையில் நடவும். உங்களிடம் குறைந்த இடம் இருந்தால் அல்லது வெள்ளரிக்காய் கொடிகளை வளர்க்க விரும்பினால், தட்டி வைத்து, அதில் வளர விடவும்.
இந்த தட்டி, ஈரமான தரையில் இருந்து பழங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். வெள்ளரிகள் வளர உகந்த வெப்பநிலை 16-32 ° C ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“