பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். 1,500 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர்.
Advertisment
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் ஒருமுறை மாடி தோட்டத்து செடிகள் நன்கு வளர்வதற்கான பல குறிப்புகளை குப்புசாமி பகிர்ந்து கொண்டார்.
தோட்டம் இருந்தா பூச்சி கண்டிப்பா வரும். அதுக்கு சிம்பிள் தீர்வு வேப்ப எண்ணெய் தான். ஆனா, இது ரொம்ப கலக்க கூடாது. அப்படி செய்ஞ்சா இலையெல்லாம் கருகி போயிடும்.
Advertisment
Advertisement
ஒரு 5 லிட்டர் தண்ணில, 10 மில்லி கலந்து ஸ்பிரே பண்ணிட்டா பூச்சி வராது. கசப்பு பூச்சிக்கு பிடிக்காது. அதேபோல செம்பருத்தில வெள்ளைப்பூச்சி வரும். அதுக்கு சாதம் வடிச்ச கஞ்சியிலநல்ல தண்ணி ஊத்தி வடிகட்டி, அதுல கொஞ்சம் வேப்ப எண்ணெய் கலந்து ஸ்பிரே பண்ணா, கஞ்சி செடியில ஒட்டிக்கும். பூச்சி செத்துரும்.
இன்னும் மழைக்காலத்துல சரியான சூரிய ஒளி கிடைக்காம செடியெல்லாம் சுருங்கி போயிடும். அதுக்கு வேப்பம் பிண்ணாக்கு கடையில கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து தண்ணில ஊறப்போடுங்க. ஒரு ஐந்து கிலோ வேப்பம் பிண்ணாக்குக்கு 20 – 25 லிட்டர் தண்ணி ஊத்துங்க. அது நல்ல ஊறிடும். ஒரு தொட்டிக்கு ஒரு டம்ளர் மேல ஊத்தக்கூடாது. இதை செய்ஞ்சா இந்த குளிருக்கு, செடிக்கு கம்பளி போத்துன மாதிரி இருக்கும். வேப்பம் பிண்ணாக்கோட தண்ணி வேருக்கு சூடு கொடுக்கும்.
எப்போவுமே செடிகளுக்கு உரம் போட்டுட்டே இருக்கணும். நான் மண்புழு உரம் போடுறேன். கெமிக்கல் உரமெல்லாம் போடாதீங்க. அது பெரிய பிரச்னை ஆயிடும்.
ஆர்கானிக் உரம் தான் போடணும். சில பேரு டிஏபி உரம் போடுவாங்க. அதையும் அப்படியே போடக்கூடாது. ஆர்கானிக் உரத்துல அரை ஸ்பூன் கலந்து போடுங்க. ரொம்ப போட்டோ செடி செத்து போயிடும், இவ்வாறு பல விஷயங்களை புஷ்பவனம் குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“