குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் பயறு வகைகள் அவசியம் தேவை. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.
காராமணி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.
வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காராமணிச் செடியை உங்கள் வீட்டில் எப்படி வளர்க்கலாம் என்று சொல்கிறார் சென்னைவாசி ராஜி கவுதமன்.
’சென்னை மாதிரி ஒரு கிளைமேட்ல காராமணி 12 மாசமும் வளர்க்க முடியும். இது பீன்ஸ்க்கு ஒரு நல்ல மாறுதல். காராமணி வீட்டுல வளர்க்கிறது ரொம்ப ஈஸி. இந்த விதைகள் வச்சதும் மூன்றே நாள்ல முளைக்க ஆரம்பிச்சு, இலை விட்ரும்.
அப்புறம் 2, 3 வாரத்துல பெரிய செடியா வளர்ந்து உடனே பூ பூக்க தொடங்கிரும். யாருனாலும் ஈஸியா இந்த செடிய வளர்க்கலாம். அதேமாதிரி இதுக்கு தண்ணிக் கூட அவ்வளவா ஊத்தணும் அவசியம் இல்ல.
வயசானவங்க, வேலைக்கு போற பெண்கள் காய்கறி வளர்க்க ஆசைப்படுவாங்க. ஆனா அதை கவனிக்க முடியாம கஷ்டப்படுவாங்க, அவங்க இந்த காராமணி வளர்க்கலாம். பீன்ஸ நம்ம எப்படியெல்லாம் சமைக்கிறோமோ அதுக்கு பதிலா இந்த காராமணியை நம்ம சமைக்க முடியும்.
காராமணி காய்கறி 6- 7 செடி வச்சா போதும். நிறைய அறுவடை கிடைக்கும். உங்களுக்கே திகட்டிரும்’… இப்படி பல விஷயங்களை ராஜி கவுதமன் தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ இங்கே
உங்க வீட்டுத் தோட்டத்தில் காராமணி வளர்ப்பது எப்படி?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“