Advertisment

தொட்டியில தண்ணீர் நின்னா எந்த செடியும் வளராது: புஷ்பவனம் குப்புசாமி வீடியோ

மாடியில தண்ணி நின்னா தளம் வீணாப் போயிடும் நினைக்கிறாங்க. ஐப்பசில இருந்து டிசம்பர் வரை மழை பெய்யுது. ஆனா அந்த தண்ணியெல்லாம் ஒரே இடத்துல நிக்காது, ஓடிடும்.

author-image
WebDesk
New Update
Gardening

Monsoon Gardening Tips

பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். 1,500 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர்.

Advertisment

அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் ஒரு வீடியோவில் மொட்டை மாடியில் தோட்டம் வைப்பது குறித்து பல விஷயங்களை குப்புசாமி பகிர்ந்து கொண்டார்.

மாடியில தோட்டம் அமைக்கணும், காய்கறி தொட்டி வைக்கணும் ஆசைப்படுறாங்க, ஆனா மாடியில தண்ணி நின்னா தளம் வீணாப் போயிடும் நினைக்கிறாங்க. ஐப்பசில இருந்து டிசம்பர் வரை மழை பெய்யுது. ஆனா அந்த தண்ணியெல்லாம் ஒரே இடத்துல நிக்காது, ஓடிடும்.

மொட்டை மாடியில தண்ணி நின்னாதானே பிரச்னை. வீடு கட்டும்போதே சாய்வா வச்சு, தண்ணி கீழே போற மாதிரி வைப்பாங்க. அந்த தண்ணிய சேகரிச்சு வைக்கணும்.. அதுதான் மழை நீர் சேகரிப்பு. நானும் அந்த மாதிரி வச்சுருக்கேன். ஆனா  தொட்டியில இருந்து வர்ற உரத்தண்ணிய கிணத்துல விட முடியாது. அதை நான் கீழே இருக்க வெத்தலை, மா, சப்போட்டா மரங்களுக்கு விட்ருவேன். இதனால தண்ணி வீணாகாது.

Pushpavanam

மாடியிலத் தோட்டம் வைக்கும்போது தொட்டியை நேரா தரையில வைக்க கூடாது. செங்கல பாதியா உடைச்சா அரைக்கல்லு சொல்லுவாங்க. 3 அரைக்கல்லு வச்சு அதுக்கு மேலே தொட்டி வச்சா, தண்ணி வடிஞ்சி அப்படியே ஓடிடும். தரையில நிக்காது. காத்துலேயே காய்சிடும். தளத்துக்கு எந்த பிரச்சனையும் வராது.

தொட்டிலயும் தண்ணி நிக்கக் கூடாது, தண்ணி நின்னா எந்த செடியும் வளராது. அது முச்சு விடுறதுக்கு வழியில்ல. தொட்டி ஓரத்துல இல்ல அடியில ஓட்டை போட்டு, அதுல மண் ஓடு வச்சு அதுமேல ஆத்து மணல் கொட்டி இன்னும் சொல்லப்போனா, தென்ன கேக் உடைச்சி போட்டு அதுக்கும் மேல மண், செம்மண், மாட்டுச்சாணம் கலந்து உரத்தை போட்டு கையால அமுக்கமா அப்படியே தண்ணி விட்டு விதைய போடலாம் இல்ல செடிகள நட்டு வைக்கலாம். இப்படி பண்ணா தண்ணி நிக்காது. செடி நல்ல வளரும்.

எப்போவுமே செடிகளுக்கு உரம் போட்டுட்டே இருக்கணும். நான் மண்புழு உரம் போடுறேன். கெமிக்கல் உரமெல்லாம் போடாதீங்க. அது பெரிய பிரச்னை ஆயிடும். ஆர்கானிக் உரம் தான் போடணும். சில பேரு டிஏபி உரம் போடுவாங்க. அதையும் அப்படியே போடக்கூடாது. ஆர்கானிக் உரத்துல அரை ஸ்பூன் கலந்து போடுங்க. ரொம்ப போட்டோ செடி செத்து போயிடும். இப்படி பல விஷயங்களை புஷ்பவனம் குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment