தூய்மையான காற்று, தண்ணீர், உணவு இந்த மூன்றும் தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை. அதற்கு நீங்கள் கிராமத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அபார்ட்மெண்ட் வீடுகளில் கூட மரம், செடி, கொடி வளர்க்கலாம்.
காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள், மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் பச்சை கழிவுகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.
அப்படி பலரும் வீடுகளில் ரோஜாச் செடி வளர்க்க ஆசைப்படுகின்றனர். ஆனால், நர்சரிகளில் உள்ளது போல, வீட்டில் உள்ள ரோஜாச் செடிகளில் பூ கொத்து கொத்தாக பூப்பதில்லை.
மண்ணில் இருக்கும் நுண்ணுயிர் பெருகினால்தான் தாவரம் வளரும்.
ரோஜா செடிகள் வளர, முட்டை ஓடு, நண்டு ஓடு, மீன் முள், இறால் தோல், எலும்பு ஆகிய அனைத்தையும் காயவைத்து பொடி செய்து பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை ஆட்டுப் புழுக்கை அல்லது மண்புழு உரத்துடன் கலந்து செடிகளுக்கு கொடுத்தாலே போதும், ஒரு செடி முனையில் ஐந்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும்.
இது செய்ய முடியாதவர்கள் முட்டை ஓடு மட்டுமே கொடுத்தால் போதும். வெங்காயத்தோல், வாழைப்பழ தோல் ஆகியவையும் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், எதையும் காய்ச்சி கொடுக்கக் கூடாது
உங்க வீட்டில் ரோஜா செடியில் மொட்டு வரவில்லை என்றால் மேலே சொன்ன குறிப்பை பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“