சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதே நேரம் சர்க்கரை மூலம் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
தோட்ட பராமரிப்புக்கு
உங்கள் தோட்டத்தில் இருக்கும் புல் மீது சிறிது சர்க்கரையை தூவி சிறிது தோண்டி எடுக்கவும். சர்க்கரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நொதி வினைகளை முடுக்கி புல்லை உயிர்ப்பிக்க உதவுகின்றன. ஒரு சில நாட்களில் புல் பச்சை நிறமாக மாறும்.
அதுமட்டுமின்றி உங்கள் பூந்தொட்டிகளில் சில சர்க்கரைப் படிகங்களைத் தூவலாம். இது பூக்கள் மற்றும் தாவரங்களின் மந்தமான தன்மையை புதுப்பிக்க உதவுகிறது.
பூச்சி வராமல் இருக்க
சர்க்கரை, தண்ணீர் மற்றும் போராக்ஸ் ஆகியவற்றை சம அளவில் கலந்து, நீங்களே கிருமிநாசினி தெளிப்பை உருவாக்கி, உங்கள் செடிகளை எறும்புகள் மற்றும் தேவையற்ற பூச்சிகளிடமிருந்து காப்பாற்றலாம். கரைசலில் சிறிது காட்டனை ஊறவைத்து, உங்கள் செடிகளைச் சுற்றி எறும்புகள் மற்றும் பூச்சிகளைக் காணும் இடத்தில் வைக்கவும், சர்க்கரை அவற்றை ஈர்க்கிறது மற்றும் போராக்ஸ் அவற்றை உடனடியாகக் கொல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“