ஆந்திரா ஸ்டைல் கம கம பூண்டு மிளகாய் பொடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 20 பல்
காஷ்மீர் மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெள்ளை எள்ளு – 3 டீஸ்பூன்
தாளிக்க தேவையானவை
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு உளுந்த பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மல்லி, சீரகம் மற்றும் வெள்ளை எள்ளு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். எள்ளு பொரிந்து மணம் வரும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த பொருட்களை ஆற வைக்கவும். பூண்டு பற்களை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஏற்கனவே வறுத்த பொருட்களான மல்லி, சீரகம், எள்ளு இந்த பொருட்களை மட்டும் சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் வதக்கிய பூண்டு மற்றும் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்து ஒரு சுற்று விடவும். உங்கள் தேவையான பதத்திற்கு ஏற்ப அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த பூண்டு மிளகாய் பொடியுடன் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு மிளகாய் பொடி ரெடி. சுடு சோற்றுடன் சாப்பிட சுவையான இருக்கும்.