Advertisment

இம்யூனிட்டிக்கு நம்பர் ஒன் இந்த சட்னிதான்... சிம்பிளான செய்முறை

Poondu chutney tamil video: பூண்டு சட்னியை இட்லி, தோசை ஆகி: யவற்றுக்கு பொருத்தமான சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
New Update
milagai chutney recipe milagai chutney recipe in tamil

milagai chutney recipe milagai chutney recipe in tamil

Garlic Chutney Recipe, Garlic Chutney Making Tamil Video: எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் பயன்படுத்த வேண்டிய ஒரு உணவுப் பொருள் பூண்டு. பூண்டு குழம்பு, பூண்டு ரசம் என வைத்து சாப்பிட்டிருப்பீர்கள். பூண்டு சட்னியும் சூப்பரான சுவையில் செய்யலாம்.

Advertisment

பூண்டு சட்னியை இட்லி, தோசை ஆகியவற்றுக்கு பொருத்தமான சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம். சாதத்திற்கும்கூட இது பயன்படுத்தத் தக்கதே! நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இந்த பூண்டு சட்னி செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

Garlic Chutney Recipe Garlic, Chutney Making Tamil Video: பூண்டு சட்னி

பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: பூண்டு - 3/4 கப், எண்ணெய் - 1 டீ ஸ்பூன், கடுகு - 1 டீ ஸ்பூன், சீரகம் - 1/2 டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்.

அரைக்க: தேங்காய் - 1 /4 கப், கடுகு - 1.5 டீ ஸ்பூன், தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 3, புளி தண்ணீர் - 1 கப், மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறிய துண்டு

பூண்டு சட்னி செய்முறை :

முதலில் பூண்டை உரித்து, வதக்கிக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து, அதில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

கொதித்து வந்ததும் அரைத்த விழுதை கொட்டிக் கலக்குங்கள். தண்ணீர் இறுகி கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து கிண்டவும். தேவைப் படும்போது எண்ணெய் கொஞ்சம் சுற்றிலும் ஊற்றிக்கொள்ளுங்கள். நன்கு சூடாகி வர, பூண்டு சட்னி தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment