இனி பூண்டு தோல் உரிப்பது ரொம்ப ஈஸி: இந்த வீடியோ பாருங்க

பூண்டு உரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது தினசரி சமைப்பவர்களுக்கு தெரியும். அதிலும் அதன் பசை நகங்களில் ஒட்டிக் கொண்டு உரிக்க முடியாமல் தொந்தரவு செய்யும்.

பூண்டு உரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது தினசரி சமைப்பவர்களுக்கு தெரியும். அதிலும் அதன் பசை நகங்களில் ஒட்டிக் கொண்டு உரிக்க முடியாமல் தொந்தரவு செய்யும்.

author-image
WebDesk
New Update
how to peel garlic

Garlic cooking tips

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பெரும்பாலான இந்திய உணவுகளுக்கு பூண்டு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது.  இது உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.  ஆனால் பூண்டு உரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது தினசரி சமைப்பவர்களுக்கு தெரியும். அதிலும் அதன் பசை நகங்களில் ஒட்டிக் கொண்டு உரிக்க முடியாமல் தொந்தரவு செய்யும்.

Advertisment

இங்கு சமையல் வல்லுநர் சரண்ஷ் கோயிலா பூண்டு உரிப்பதற்கான சில சூப்பர் பயனுள்ள ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளார்.

1. ஒரு முழு பூண்டை 20 விநாடிகளுக்கு மைக்ரோவேவ்வில் வைக்கவும். பிறகு மேலிருந்து துண்டுகளாக நறுக்கினால், ஒரே நேரத்தில் நிறைய பூண்டுகளை உரிக்கலாம். அவையும் எளிதில் வெளியே வரும்.

Advertisment
Advertisements

இருப்பினும், இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், அவை கொஞ்சம் சமைக்கப்பட்டவையாக இருக்கும். எனவே அவற்றை உங்களால் சில உணவுகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனாலும், அவற்றை பெரும்பாலனா உணவுகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார் சரண்ஷ் கோயிலா.

2. இரண்டு கிண்ணங்களில் அல்லது காக்டெய்ல் ஷேக்கரில் அல்லது மூடியுடன் கூடிய பெரிய ஜாடியில் பூண்டு சேர்த்து குலுக்கவும். இது பெரிய பூண்டு பற்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் சிறிய பூண்டு பற்களின் தோல்கள் அவ்வளவு எளிதில் உரிபடாது.

Garlic peel

3. ஒரு முழு பூண்டின் மேல் கத்தியை அழுத்தவும். இது அவற்றை எளிதில் உடைகிறது. இந்த ஹேக் அனைத்து சமையல் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் உன்னதமான முறையாகும். இந்த எளிய செய்முறை பூண்டு பற்களை எளிதில் வெளியே கொண்டு வர முடியும். ஆனால், நீங்கள் நிறைய பூண்டு பற்களை உரிக்க வேண்டியிருந்தால், இந்த செய்முறை உங்களை சோர்வடைய செய்யும், என்று சமையல் வல்லுநர் சரண்ஷ் கோயிலா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: