கொரோனா தொற்று மற்றும் இந்த பருவ கால காய்ச்சல்களில் இருந்து தப்பிக்க பலரும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் நோய் எதிர்ப்புக்கு உதவும் பாணங்களையும் உனவுகளையும் எடுட்துக்கொள்கின்றனர். அதனால், உடலில் நோய் எதிர்பை கூட்ட செஃப் ஷிப்ரா கன்னா பூண்டு, தேன், லெமன் ஜூஸ் நோய் எதிர்ப்பு பானமாக பரிந்துரைக்கிறார். இதை காலையில் குடித்து முயற்சித்து பாருங்கள்.
அனைவரும் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்வது நல்ல விஷயம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அதிகம் செலவு செய்ய வேண்டிதில்லை. வீடுகளில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு சமையலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் இருக்கிற பொருட்கள் போதுமானது. ஆனால், பொதுவாக சமையலறை மசாலாப் பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எப்படி உதவும் என்று தெரியவில்லை என்றால், மாஸ்டர் செஃப் வெற்றியாளர் செஃப் ஷிப்ரா கன்னாவின் இந்த பதிவைப் பாருங்கள்.
செஃப் ஷிப்ரா கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பூண்டு, தேன், லெமன் ஜூஸ் என நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கிய பாணத்தை பருகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரண்டு ஆரோக்கிய பாணங்களை பரிந்துரைத்துள்ளார்.
இஞ்சி ஜூஸ்
தேவையான பொருட்கள்:
1 டீஸ்பூன் - இஞ்சி சாறு
1 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
1/4 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி - தேன்
1/2 ஷாட் - வெதுவெதுப்பான தண்ணீர்
செய்முறை
இஞ்சியைத் துருவி, வடிகட்டியைப் பயன்படுத்தி சாறு எடுத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள் அவ்வளவுதான்.
பூண்டு ஜூஸ்
தேவையான பொருட்கள்:
1 - நல்ல பூண்டு
1 டீஸ்பூன் - தேன்
1/4 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
1/2 கப் - வெதுவெதுப்பான நீர்
முறை
பூண்டு எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கலக்குங்கள்.
அவ்வளவுதான் இந்த பாணங்களை காலையில் குடித்து வந்தால், செம்ம இம்யூனிட்டி உருவாகும்…
பூண்டு மற்றும் இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்
இஞ்சி சாறு அதன் நோய் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக செரிமானத்தை மேம்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. ஆயுர்வேதத்தின்படி, காரமான இஞ்சி சாறு வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பூண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக அதிகரிக்கும் ஒரு சூப்பர்ஃபுட் என்று செஃப் ஷிப்ரா கன்னா குறிப்பிட்டுள்ளார். “பூண்டில் உள்ள பல்வேறு கலவைகள் இருதய நோய்களுக்கான அபாயத்தைக் குறைப்பதாகவும், கட்டி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும், உயர் இரத்த குளுக்கோஸ் செறிவூட்டலில் பலன் அளிப்பதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், அனைத்து பொருட்களின் சரியான வழிமுறை மற்றும் அவற்றின் நீண்டகால பலன்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை” என்று கூறப்படுகிறது.
எனவே, பூண்டு, இஞ்சி, தேன், லெமன் ஜூஸ் காலையில் குடித்துவட்ந்தால் செம்ம இம்யூனிட்டி உருவாகும். இனியும் காத்திருக்காதீர்கள். இந்த ஆரோக்கிய பாணத்தைப் பருக இப்போதே சீயர்ஸ் சொல்லுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.