வெங்கடேஷ் பட் செய்த வேர்கடலை பூண்டு ரெசிபி, நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் 2 ஸ்பூன்
150 கிராம் வேர்கடலை
50 கிராம் தேங்காய்
75 கிராம் பூண்டு
16 காஷ்மீரி வத்தல்
3 கை பொட்டுக்கடலை
1 ½ ஸ்பூன் சீரகம்
25 கிராம் புளி
1 ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து வேர்கடலை சேர்த்து கிளரவும். நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். தொடர்ந்து இதில் தேங்காய், பூண்டு, வத்தல், பொட்டுக்கடலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து 1 கொத்து கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து பெருங்காயத்தூள் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளியை சேர்க்கவும். தொடர்ந்து இதை சூடு ஆறும் வரை காத்திருந்து. அதை அரைக்கவும். இதை நாம் சாதத்தில் சேர்த்து அல்லது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.