இந்தியாவில் உணவுகள் எண்ணற்ற உணவுகள் மற்றும் சமையல் முறைகளைக் கொண்டது. எளிய சமையல் முறைகள் மூலமாக உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். நவீன கால தேவைகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை காலங்களில் உணவே மருந்தாக அமையும். இன்று, பூண்டு பாலின் நன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
பூண்டு பால் செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து அதனுடன் 4-5 பூண்டை போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அந்த பாலுடன் பூண்டையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.
பூண்டின் நன்மைகள்: பூண்டில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்