இந்த பூண்டு ஊறுகாய் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பூண்டு- 500 கிராம்
நல்லெண்ணை- 4 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி- கால் ஸ்பூன்
உப்பு
புளி- சிறிய அளவு
வெல்லம்- கொஞ்சம்
செய்முறை : வெந்தயத்தையும், கடுகுகையும் நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். தற்போது பூண்டு தோல் நீக்கி, அதை நன்றாக எண்ணெய்யில் வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து புளியை கொஞ்சம் கரைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து எண்ணெய் விட்டு, அதில் கடுகு போட்டு, கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் பூண்டு சேக்கவும், தொடர்ந்து, கடுகு – வெந்தயம் அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கடைசியாக சிறிது வெல்லம் சேருங்கள்.