ரசம் பொதுவாகவே ஜீரணம், செரிமானத்திற்கு உதவும் என அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் கூடுதல் சுவையுடன் பூண்டு ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 5 பற்கள்
மிளகாய் வற்றல் – 2
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
தக்காளி – 1
பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு
தண்ணீர் – 2 கப்
நெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை
பூண்டு, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தனியா கவைக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், எண்ணெயை விட்டு, தக்காளி, கறிவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து, புளி கரைசல் சேர்த்து கடாயை மூடி வைத்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பில் வைத்துள்ள ரசத்தில் சேர்க்கவும். ரசத்தை இறக்கும் போது கொத்தமல்லி இலை போட்டு மிளகு தூள் தூவவும். அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியமான பூண்டு ரசம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“