Garlic Rice Tamil News, Garlic Pepper Rice Making Video: குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து வயதினருக்கும் தேவையான சத்துக்கள் நிறைந்த சாதம் என்றால் அது பூண்டு மிளகு சாதம் என்பதை கண்ணை மூடி சொல்லலாம். பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் பூண்டு மிளகு சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
Advertisment
Advertisements
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
நெய்
உப்பு
செய்முறை
பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil