பூண்டின் மகத்தான பயன்கள்! இனி தயவு செய்து தூக்கி போடாதீங்க!!

பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும்

garlic uses and weight loss tips - பூண்டின் மகத்தான் பயன்கள்! இனி தயவுசெய்து தூக்கி போடாதீங்க!!
garlic uses and weight loss tips – பூண்டின் மகத்தான் பயன்கள்! இனி தயவுசெய்து தூக்கி போடாதீங்க!!

உணவில் இருந்து தவறாமல் நாம் புறக்கணிக்கும் வகையறாக்களில் பூண்டும் ஒன்று. கறிவேப்பிலை, மிளகாய் போன்றவற்றுடன் பூண்டையும் தட்டில் ஒரு ஓரமாக எடுத்து வைத்துவிடுவோம். ஆனால், அந்த பூண்டின் உண்மையான மகத்துவம் என்ன என்பதை நாம் அறியவும் இல்லை அறிய விருப்பப்படுவதும் இல்லை. நமது உடல் எடையை குறைப்பதில் இருந்து பல்வேறு மகத்தான பூண்டின் பயன்களை இங்கே பார்க்கலாம்.

பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.

பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும்.

நம் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்ளது.

பூண்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவிடும்.

உடல் பருமன் என்பது நீண்ட-கால குறைந்த-தர அழற்சி என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் படி, பூண்டு உடலில் உள்ள கொழுப்பு அணுக்களின் உருவாக்கத்தை சீர்படுத்த உதவுகிறது. தினம் காலை 3 அல்லது 4 பூண்டை நீரில் போட்டு சாப்பிடலாம். சுடு தண்ணீரில் பூண்டு போட்டு சாப்பிடுவது கூடுதல் நல்லது. மிக விரைவில், உடல் எடையில் மாற்றத்தை காண்பீர்கள்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Garlic uses and weight loss tips

Next Story
Happy Friendship Day 2019 : நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு!Happy Friendship Day 2019 Wishes Images, Status, Quotes, Messages, Photos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com