நமக்கு ஏற்படும் வயிற்று உப்புதல் மற்றும் வாயுத்தொல்லையை நீக்க சில உணவுகளை நாம் எடுத்துகொள்ளலாம். குறிப்பாக பெருஞ்சீரகம் எடுத்துகொள்ளலாம். இந்நிலையில் இது ஜீரணக்க உதவும் டைஜஸ்டிவ் ஜூஸை சுரக்க உதவுகிறது. மேலும் இதன் தண்ணீரை நாம் காலையில் குடிக்க வேண்டும்.
பப்பாளி இது ஜீரணத்திற்கு உதவும். இதில் உள்ள பாபயின் என்ற என்சைம் ஜீரணத்திற்கு உதவுகிறது. இஞ்சியில் ஜீரணத்திற்காக உதவும் பண்புகள் உள்ளது. இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் ஜீரணம் அதிகரிக்கும்.
புதினாவை நாம் எடுத்துகொண்டால் வயிற்று உப்புதல், வாயுத் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் புதினாவின் எண்ணெய் நமது வயிற்றில் வலியை குறைக்கும்.
யோகர்ட் அல்லது தயிரில் ப்ரோபயாட்டிக்ஸ் உள்ளது. இது ஆரோக்கியமான குடலை நமக்கு கொடுக்கும். மேலும் இதனால் இந்த சிக்கல் வராது.