கருப்பான கேஸ் பர்னர் புதுசாக மாறும்… இந்த டிரிக் டிரை பண்ணுங்க!

உங்கள் வீட்டில் பர்னர்கள் கருப்பாக பழையபடி மங்கிப் போய், அடைப்புகளுடன் இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தி, உங்கள் பர்னர்களை புத்தம் புதிதாக்கலாம்.

உங்கள் வீட்டில் பர்னர்கள் கருப்பாக பழையபடி மங்கிப் போய், அடைப்புகளுடன் இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தி, உங்கள் பர்னர்களை புத்தம் புதிதாக்கலாம்.

author-image
WebDesk
New Update
gas

பர்னர்கள் சுத்தமாக இருந்தால் தான், தீ சீராகப் பரவி, சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு வரும். அடைப்புகளுடன் இருந்தால், எரிவாயு விரயம் ஆவதுடன், சமையல் நேரமும் அதிகரிக்கும்.

வீட்டில் தினமும் சமையல் செய்யும் போது, கேஸ் அடுப்பை சுத்தம் செய்வது என்பது ஒரு வழக்கமான விஷயம். ஆனால், கேஸ் அடுப்பின் உயிர்நாடியான பர்னர்களை எத்தனை பேர் கவனிக்கிறோம்? பர்னர்கள் சுத்தமாக இருந்தால் தான், தீ சீராகப் பரவி, சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு வரும். அடைப்புகளுடன் இருந்தால், எரிவாயு விரயம் ஆவதுடன், சமையல் நேரமும் அதிகரிக்கும். 

Advertisment

உங்கள் வீட்டில் பர்னர்கள் கருப்பாக பழையபடி மங்கிப் போய், அடைப்புகளுடன் இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தி, உங்கள் பர்னர்களை புத்தம் புதிதாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொதிக்கும் நீர்

ஒரு முழு எலுமிச்சை (பாதியாக நறுக்கியது)

ஈனோ பவுடர் (ENO powder)

சோப்பு நார் (அ) இரும்பு ஸ்க்ரப்

துடைப்பக் குச்சி (அல்லது மெல்லிய கம்பி)

செய்முறை:

முதலில், உங்கள் கேஸ் பர்னர்கள் முழுமையாக மூழ்கும் அளவு அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நன்கு கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.

பாதியாக நறுக்கிய முழு எலுமிச்சையையும் நீருக்குள் பிழிந்து விட்டு, எலுமிச்சைத் துண்டுகளையும் அதிலேயே போடுங்கள்.

Advertisment
Advertisements

இப்போது, ஈனோ பவுடரை அந்த நீரில் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். உடனடியாக நுரை பொங்கி வருவதைப் பார்க்கலாம்!

இக்கலவையில் உங்கள் பர்னர்களைப் போட்டு, குறைந்தது 2 மணி நேரம் நன்கு ஊற விடுங்கள். புகைக் கறைகள் மெல்ல நீங்குவதை நீங்கள் இப்போதே உணரலாம்.

பர்னர்கள் நன்கு ஊறியதும், அதை வெளியே எடுத்து, சோப்பு நார் அல்லது இரும்பு ஸ்க்ரப் கொண்டு சுற்றிலும் நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள். கறைகள் எளிதாக நீங்கும்.

இப்போது சுத்தமான தண்ணீரில் அலசுங்கள். உங்கள் பர்னர்கள் புதிதுபோல் பளபளப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். பர்னரின் துளைகளில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், ஒரு துடைப்பக் குச்சி அல்லது மெல்லிய கம்பியைப் பயன்படுத்தி ஒவ்வொரு துளையிலும் விட்டு சுத்தம் செய்யுங்கள்.

இந்த எளிய டிப்ஸை வாரம் ஒரு முறை கடைப்பிடித்தால் போதும். உங்கள் கேஸ் பர்னர்கள் எப்போதுமே புதிது போல இருக்கும். அதுமட்டுமல்லாமல், எரிவாயுவும் வீணாகாமல், சிலிண்டர் நீண்ட நாட்களுக்குப் பயன்படும். இனி சமையல் செய்வது மேலும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: