கேஸ் ஸ்டவ் மெதுவா எரியுதா? தேங்காய் நார் வைத்து இப்படி பண்ணுங்க… திகுதிகுணு எரியும்!

வீட்டில் கேஸ் ஸ்டவ் மெதுவா எரிகிறதா? கவலைப்படாதீர்கள் தேங்காய் நார் வைத்து இப்படி செய்தால், கேஸ் ஸ்டவ் திகுதிகுணு எரியும், உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

வீட்டில் கேஸ் ஸ்டவ் மெதுவா எரிகிறதா? கவலைப்படாதீர்கள் தேங்காய் நார் வைத்து இப்படி செய்தால், கேஸ் ஸ்டவ் திகுதிகுணு எரியும், உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
gas

உங்கள் வீட்டு கேஸ் ஸ்டவ்வை சரி செய்ய செலவே இல்லாமல் சூப்பரான டிப்ஸை ஃபாதுஸ் சமையல் (Fathu's Samayal) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

வீட்டில் கேஸ் ஸ்டவ் மெதுவா எரிகிறதா? கவலைப்படாதீர்கள் தேங்காய் நார் வைத்து இப்படி செய்தால், கேஸ் ஸ்டவ் திகுதிகுணு எரியும், உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். 

Advertisment

வீட்டில் கேஸ் ஸ்டவ் மெதுவாக எரிகிறதா, அதை ரிப்பேர் செய்ய வேண்டும் என்றால், ரிப்பேர் செய்பவர்கள் நிச்சயமாக 200 ரூபாய் கேட்பார்கள். அதனால், உங்கள் வீட்டு கேஸ் ஸ்டவ்வை சரி செய்ய செலவே இல்லாமல் சூப்பரான டிப்ஸை ஃபாதுஸ் சமையல் (Fathu's Samayal) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

உங்கள் வீட்டில் கேஸ் ஸ்டவ் மெதுவா எரிகிறது என்றால் அதற்கு காரணம், மெதுவா எரிகிற பர்னரின் வால்வில் தூசி  அடைத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், அந்த பர்னரின் வால்வை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு ஒரு தேங்காய் நார் எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காய் நார் ஒரு இழையை பிச்சி எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, கேஸ் ஸ்டவ்வை தனியாக எடுத்து திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எந்த பர்னர் எரியவில்லையே அந்த பர்னரின் வால்வு துளையில் இந்த தேங்காய் நார் இழையை நுழைத்து சுத்தம் செய்யுங்கள். 

Advertisment
Advertisements

அதே போல, காத்து பிடிக்கிற கை பம்ப் வைத்தும் மெதுவா எரிகிற கேஸ் ஸ்டவ் பர்னரை சுத்தம் செய்யலாம். பம்ப் காற்றுக் குழாயை எடுத்து, அடைப்பு உள்ள வால்வில் வைத்து காற்று அடித்தால் சுத்தமாகி அடைப்பு சரியாகும். பிறகு, அவற்றை சரியாகப் பொருத்தி, பற்ற வைத்தால் அந்த பர்னர் திகுதிகுணு எரியும். உங்கள் வீட்டில் பாதுகாப்பாக இதை ட்ரை பண்ணி பாருங்கள்.

Lpg Gas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: