ஹைதராபாத்தில் முதன்முறையாக ஓரினச்சேர்க்கை ஜோடி திருமணம்: நடிகை சமந்தா வாழ்த்து!

இந்தியச் சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்கவில்லை என்றாலும், தங்களை சோல்மேட்ஸ்’ என்று அழைத்துக் கொள்ளும் ஜோடி -சுப்ரியோ சக்ரவர்த்தி (31) மற்றும் அபய் டாங்கே (34) – தங்கள்திருமணம் செய்து தங்களது உறவை புனிதப்படுத்தினர்.

gay-wedding
The couple call themselves 'soulmates' (Source: Supriyo Chakraborty/Sahni Studio/Instagram)

முதன்முறையாக ஹைதராபாத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்தியச் சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்கவில்லை என்றாலும், தங்களை சோல்மேட்ஸ்’ என்று அழைத்துக் கொள்ளும் சுப்ரியோ சக்ரவர்த்தி (31) மற்றும் அபய் டாங்கே (34) தம்பதிகள் – அக்டோபரில் தங்கள் திருமணத்தை அறிவித்த பிறகு ஹைதராபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்தனர். இந்த படங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வைரலானது. நடிகை சமந்தா கூட இந்த செய்தியை மறு ட்வீட் செய்து இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

LGBTQ சமூகத்தைச் சேர்ந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தம்பதிகளின் தோழியான சோபியா டேவிட், “நான் இப்போது உங்களை கணவர் மற்றும் கணவர் என்று உச்சரிக்கிறேன் என்று வாழ்த்து கூறினார்.

பெங்காலி மற்றும் பஞ்சாபி சடங்குகள் இரண்டையும் பின்பற்றி நடந்த திருமணத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் LGBTQ சமூகத்தைச் சேர்ந்த 60 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து ஆண்களுக்கும் மெஹந்தியை உள்ளடக்கிய பாரம்பரிய சடங்குகளுக்காக, இந்த ஜோடி’ டிசைனர் ஷெர்வானிகளை அணிந்திருந்தது. அதே நேரத்தில் அவர்கள் நிச்சயத்தார்த்த விழாவிற்கு பெள டைஸ்’உடன் வெள்ளை ஜாக்கெட்டுகளை தேர்வு செய்தனர். சங்கீத் விழாவில் கதக் நிகழ்ச்சிகள் நடந்தன.

“இத்தகைய அற்புதமான தம்பதியினரின் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன், அவர்களின் கதை எங்கிருந்து தொடங்கியது என்று கேட்டது முதல், விதிமுறைகளை மீறுவது மற்றும் அவர்கள் இடை-வழியில் நடந்து செல்லும் தருணத்தைப் படம்பிடித்தது மற்றும் இறுதியாக அவர்களின் அன்புக்குரியவர்கள் முன் ஒருவருக்கொருவர் ஒருவராக இருக்க வேண்டும் என்று அறிவித்தது என அவர்கள் சமூகத்துக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர் என்று அவர்களின் புகைப்படக் குழுவான சாஹ்னி ஸ்டுடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gay couple from hyderabad ties the knot see celebratory pics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express