Gayathri Raj : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பேரழகி’ என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்தவர் காயத்ரி ராஜ். இந்த சமூகம் நிற மாயையால் எந்தளவு பின்னோக்கி இருக்கிறது எனவும், கறுப்பாக இருப்பவர்கள் எல்லோரையும், ஏதோ குறைபாடு உள்ளவர்கள் / குற்றவாளிகள் போல மற்ரவர்கள் நினைப்பதையும், அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருந்தது.
காயத்ரி ராஜ்
மகளிர் டி20 உலகக் கோப்பை தோல்வி – WV ராமனின் பணியை குறைத்து மதிப்பிட முடியாது
அந்த சீரியலில் கயல் என்ற நடிகையாகவே நடித்திருந்தார் காயத்ரி. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், இவர் தான் ஏற்று நடித்த கயல் கதாபாத்திரத்துக்கு அப்படியே எதிரான மற்றொரு கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகு’ சீரியலில், ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இயக்குநர் வெற்றிமாறனுடன்...
இந்த சீரியலில் புதுவரவாக இணைந்துள்ளார் காயத்ரி. அதாவது பழனிச்சாமி (தலைவாசல் விஜய்) தன்னை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துக் கொண்டிருப்பதாகக் கூறி வீட்டை ஏமாற்றும் வில்லியாக மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காயத்ரி. மற்றவர்களை விட வயதில் சின்னப் பெண்ணாக இருக்கும் அவர், வில்லி கதாபாத்திரத்தில் தேர்ந்தவரைப் போல மிரட்டுகிறார். மூத்த நடிகை ரேவதிக்கே தண்ணிக் காட்டுவது போல மல்லிகாவின் கதாபாத்திரம் டிஸைன் செய்யப்பட்டுள்ளது.
Master Second Single Live : சென்னை சூப்பர் கிங்ஸில் ’மாஸ்டர்’ விஜய்!
சரி காயத்ரியின் நிஜ வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்... சென்னையைச் சேர்ந்த இவருக்கு இப்போதைய வயது 24. இளங்கலை கணிதம் பயின்றவர். இவரது பயணம் தொடங்கியது, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ படத்தில்... அதன் பிறகு, மான் கராத்தே, மெட்ராஸ், இனிமே இப்படித்தான், மருது, டோரா, மகளிர் மட்டும் ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார். பேரழகி சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள்ளும் நுழைந்தார். இப்போது வில்லியாக மிரட்டி வருகிறார்.