Tamil Serial News: வில்லன் ஹீரோவாக நடிப்பதும், ஹீரோ வில்லனாக நடிப்பதும், தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஹீரோயினாக இருந்து தற்போது வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி ராஜா.
தொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்!
ஆரம்ப நாட்களிலும் இப்போதும் காயத்ரி ராஜ்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கயல்’ சீரியல் தான் காயத்ரிக்கு முதல் சீரியல். கறுப்பழகி கயல் என, ஒரு நடிகையாகவே நடித்திருந்தார். நிற ஏற்றத் தாழ்வை கருவாக வைத்து அந்த சீரியல் இயக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இயக்குநர் வெற்றிமாறனுடன்
இதனையடுத்து தான் ஏற்று நடித்த கயல் கதாபாத்திரத்துக்கு அப்படியே எதிரான மற்றொரு கதாபாத்திரத்தில் சன் டிவி-யின் அழகு சீரியலில் நடித்தார் காயத்ரி. ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அந்த சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் வில்லி அவதாரம் எடுத்தார்.
டிரடிஷனல் லுக்கில்
கொரோனா தொற்றை முன்வைத்து அந்த சீரியலும் கடந்த ஏப்ரல் மாதமே முடிவடைந்தது. இன்னிலையில் தற்போது மீண்டும் சன் டிவி-யில் நடித்து வருகிறார். அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் அகிலா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மீண்டும் பயணத்தை தொடங்கியிருக்கிறார் காயத்ரி ராஜா. வட்ட முகம், உருண்டை கண்கள், குடும்பப் பாங்கான தோற்றம், மிகையில்லா நடிப்பு என பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.
கறுப்பு தான் காயத்ரின் ஃபேவரிட் கலராம்
சென்னையைச் சேர்ந்த காயத்ரி ராஜாவுக்கு வயது 24. சென்னை மகளீர் கல்லூரியில், இளங்கலை கணிதம் பயின்றவர். இவரது பயணம் தொடங்கியது, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ படத்தில்… அதன் பிறகு, மான் கராத்தே, மெட்ராஸ், இனிமே இப்படித்தான், மருது, டோரா, மகளிர் மட்டும் ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார். காயத்ரியின் அப்பா ஃபைனான்ஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். அம்மா இல்லத்தரசி.
நோ மேக்கப் காயத்ரி
கதறி அழுத போட்டியாளர்கள்: பிக் பாஸில் என்ன நடந்தது?
வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்குள் நுழைந்த காயத்ரிக்கு, ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து விட்டு, மீண்டும் வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் லட்சியமாம்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”