நிலாச்சோறு கான்செப்ட், தாவணியில் காயத்ரி, பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. சித்தி 2 வில்லியின் வைரல் வீடியோ!

Gayathri Yuvaraj Latest Youtube Surprise Viral Video என்னடா ஏதோ பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றபடி திகைத்து நின்றார் காயத்ரி.

Gayathri Yuvaraj Latest Youtube Surprise Viral Video
Gayathri Yuvaraj Latest Youtube Surprise Viral Video

Gayathri Yuvaraj Latest Youtube Surprise Viral Video : காணொளியில் தொடக்கத்திலேயே தன்னுடைய அம்மாவுக்கு வெறித்தனமான சர்ப்ரைஸ் கொடுக்கப்போகிறோம் என்றபடி காயத்ரியின் மகன் தன் தாயின் பிறந்தநாளுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யும் செய்தியை மிகவும் உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார். “பிறந்தநாள் அப்போதும் ஷூட்தான் போயிருக்காங்க அம்மா. அவங்க வர்றதுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணிடனும்” என்றபடி அவசரமாகக் காணொளியைக் கட் செய்தார்.

பிறகு காயத்ரியை யுவராஜ் வீட்டிற்குள் கூட்டி வர, என்னடா ஏதோ பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றபடி திகைத்து நின்றார் காயத்ரி. பிறகு அவருக்காக வாங்கி வைத்திருந்த புதிய உடையைக் கொடுத்தது மட்டுமல்லாமல், காயத்ரியின் தோழிகளையும் அழைத்து சர்ப்ரைஸ் செய்திருக்கின்றனர் காயத்ரியின் குடும்பத்தினர். பிறகு ஜனனி உள்ளிட்ட சில சின்னத்திரை நண்பர்கள் அவரைப்பற்றிய கருத்துகளோடு வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

அவருக்கு மிகவும் பிடித்த தாவணி அணிந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார் காயத்ரி. அவருடைய கண்களை மூடிக்கொண்டு, கேக் வெட்டிக் கொண்டாடும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் ஜனனி அசோக். கேக்கைவிட அங்கு வந்திருந்த தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்தைப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் காயத்ரி. பிறகு என்ன ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அந்த இடமே அதிர்ந்தது.

நேற்று ஒண்ணுமே செய்யவில்லை என்று கோபத்தில் இருந்தவரை முழுமையாக சமாதானம் செய்து விட்டார் யுவராஜ். கேக் கட்டிங், பரிசுகள் பரிமாற்றம், புகைப்படங்கள் என களைகட்டியது. உண்மையில் சர்ப்ரைஸ் ஆகிவிட்டேன் என்று காயத்ரி கூற, யுவராஜின் நிலாச்சோறு கான்செப்ட் இனிதே நிறைவடைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gayathri yuvaraj latest youtube surprise viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com