சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.
கீதிகா ஸ்ரீவஸ்தவா, 2005 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி, டாக்டர் எம் சுரேஷ் குமாருக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) இருப்பார்.
இரு நாடுகளும் தற்போது பரஸ்பர தலைநகரில், ராஜதந்திர பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள நிலையில் – அங்கு உயர் ஸ்தானிகர்கள் இல்லை.
எனவே உயர் பதவியில் உள்ள பொறுப்பு அதிகாரி, இணைச் செயலாளர் பதவிக்கு சமமான அதிகாரியாக இருப்பார்.. அந்தவகையில், பாகிஸ்தானில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தை வழிநடத்த பெண் ஐஎஃப்எஸ் அதிகாரியை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.
தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) தலைமையகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றும் கீதிகா, இந்தோ-பசிபிக் பிரிவைக் கவனித்து வருகிறார்.
தனது வெளிநாட்டு மொழிப் பயிற்சியின் ஒரு பகுதியாக மாண்டரின் மொழியைக் கற்றுக்கொண்ட ஒருவராக, கீதிகா 2007-09 காலகட்டத்தில் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றினார். அவர் கொல்கத்தாவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திலும், வெளியுறவு அமைச்சகத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
1947 முதல், அப்போதைய பாகிஸ்தானின் ராஜ்ஜியத்துக்கு இந்திய உயர் ஆணையராக ஸ்ரீ பிரகாசா அனுப்பப்பட்டதிலிருந்து- புது தில்லி எப்போதும் ஆண்களாகிய ராஜதந்திரிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இதுவரை 22 தூதரக தலைவர்கள் இருந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்திற்கான கடைசி இந்திய உயர் ஸ்தானிகர் அஜய் பிசாரியா ஆவார். 2019 இல் 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து உயர் ஸ்தானிகராலயத்தின் அந்தஸ்தைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு செய்ததை அடுத்து அவர் திரும்பப் பெறப்பட்டார்.
பெண் இராஜதந்திரிகள் பாகிஸ்தானுக்கு முன்பே அனுப்பப்பட்டுள்ளனர், ஆனால் உயர் மட்டத்தில் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமாபாத் இந்திய ராஜதந்திரிகளுக்கு "குடும்பம் அல்லாத" போஸ்டிங் (non-family posting) ஆக அறிவிக்கப்பட்டதால், இது ஒரு கடினமான பணியாக கருதப்படுகிறது. இது பொதுவாக பெண் அதிகாரிகளை பாகிஸ்தானில் பணியை மேற்கொள்வதை கட்டுப்படுத்துகிறது.
தற்போது, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் முதல் செயலாளர் மட்டத்தில் ஒரு பெண் ராஜதந்திரி உள்ளார். கீதிகா விரைவில் இஸ்லாமாபாத்தில் தனது பணியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானும் புது தில்லியில் ஒரு புதிய பொறுப்பு அதிகாரியாக சாத் அஹ்மத் வாராய்ச் நியமித்தது.
கடந்த மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி இஸ்லாமாபாத்துக்குத் திரும்பிய சல்மான் ஷெரீப்புக்குப் பிறகு, சாத் அஹ்மத் வாராய்ச் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதரகத்தில் பணியாற்றிய ஒரு தொழில் தூதர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“