கல்லூரிக்கு சேலை கட்டி வந்த மாணவர்கள் - காரணம் இதுதானாம் : குவியும் பாராட்டுகள்
Students wear saree for gender equality : பாலின சமத்துவத்தை வலியுறுத்தி புனே கல்லூரிக்கு மாணவர்கள் 3 பேர் சேலை கட்டி வந்த நிகழ்வு, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
Students wear saree for gender equality : பாலின சமத்துவத்தை வலியுறுத்தி புனே கல்லூரிக்கு மாணவர்கள் 3 பேர் சேலை கட்டி வந்த நிகழ்வு, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
breaking social norm, social construct, boys in saree, fergusson college pune, pune news, indian express news
Dipanita Nath
Advertisment
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி புனே கல்லூரிக்கு மாணவர்கள் 3 பேர் சேலை கட்டி வந்த நிகழ்வு, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பெர்குசான் கல்லூரியில், ஆண்டுதோறும் பாரம்பரிய விழா நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள், இந்த விழாவின் போது தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து வருவர். வரலாற்று துறையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களான ருஷிகேஷ் சனாப், சுமித் ஹான்வடாஜ்கர், ஆகாஷ் பவார் உள்ளிட்ட மாணவர்கள் கல்லூரிக்கு சேலைகட்டி வந்தனர். இந்த நிகழ்வு, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரிடையும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Advertisment
Advertisements
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..
பெர்குசான் கல்லூரியின் முதல்வர் ரவீந்திரசிங் ஜி பர்தேஷி கூறியதாவது, நான் 1984ம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த பாரம்பரிய விழா நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த முறை பாலின சமத்துவத்தை வலியுறுத்தி 3 மாணவர்கள் சேலை கட்டி வந்த நிகழ்வு, எங்களது கல்லூரி வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த மாணவர்களின் செயலை பாராட்டுகிறேன். அவர்கள் பாலின சமத்துவதத்திற்காக மேற்கொண்ட இந்த நிகழ்வு அனைவராலும் வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
மாணவர் ஆகாஷ் பவார் கூறியதாவது, எங்கள் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான லோக்மான்ய திலக், மகாத்மா காந்தி உள்ளிட்ட பிரபலங்களுடன் பாலின சமத்துவம் குறித்து இங்கு நடத்திய விவாதங்கள் உலகப்புகழ் பெற்றவை. சேலை கட்டுதல் என்பது ஆண்களாகிய நமக்கு எல்லாம் ஒரு சாதாரண நிகழ்வு போல தோன்றும். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சேலைக்கு ஏற்றாற்போல பிளவுஸ், பெட்டிகோட், சேப்டி பின் உள்ளிட்டவைகளை அணிய வேண்டும்.
மாணவர்களுக்கு சேலை கட்ட உதவி புரிந்த மாணவி ஸ்ரத்தா தேஷ்பாண்டே கூறியதாவது, நாங்கள் வரலாற்றுத்துறை மாணவர்கள்.எங்களது இந்த நிகழ்வின் மூலம் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்காக, மாநிறம் கொண்ட ஹான்வடாஜ்கருக்கு, பர்பிள் நிறத்தில் சேலையையும், கறுப்பு நிற அழகனான பவாருக்கு ஆரஞ்சு நிற சேலையையும், தாடி வைத்த சனாப்பிற்கு கிரீமி சில்க் நிறத்தில் சேலையையும் தேர்ந்தெடுத்தேன்.
3 மாணவர்களும் சேலை அணிந்த நிலையில், தேஷ்பாண்டேவின் கார் மூலமாகவே கல்லூரிக்கு வந்தனர். முதலில் அவர்கள் காரில் இருந்து இறங்க சற்று தயங்கினர் . பின் அவர்களுக்காகவே வந்த உத்வேகத்தின் காரணமாக, காரில் இருந்து இறங்கினர். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த அனைவரும் இவர்களை நோக்கி படையெடுக்க துவங்கினர்.
டேய், அப்படியே பொம்பள மாதிரி இருக்கீங்களேடா என்று மாணவர்கள் இவர்களை கிண்டல், கேலி செய்தனர். அதனையெல்லாம் பொருட்படுத்தாத அவர்கள், விழா அரங்கு நோக்கி நடக்க துவங்கினர். மாணவர்களில் சிலர் கிண்டல் பண்ணபோதிலும், மாணவிகள் இவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
சுமித் பவார் கூறியதாவது, எங்கள் கல்லூரிக்கு அருகிலேயே பால் கந்தர்வா ரங் மந்திர் உள்ளது. பால் கந்தர்வா ரங் யாரெனில், நாடகங்களில் பெண் வேடமிட்ட முதல் நடிகர். இவர் தனது வாழ்க்கையையே நாடகங்களுக்காக அர்ப்பணித்தவர். மக்கள், அவரின் நாடகங்களை பெருமளவில் பாராட்டினர். நாடகங்களில் சேலை கட்டிவந்தால், பாராட்டு தெரிவிக்கும் நமது மக்கள், நிஜத்தில் அதை தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஹான்வடாஜ்கர் கூறியதாவது, சேலை அணிந்ததால், என்னால் சிறிது தொலைவு கூட சிரமம் இல்லாமல் நடக்க முடியவில்லை. சேலை அணிவதே முதலில் கடினமாக இருந்தது. சேலை கட்டிக்ககொண்டு சிறிது நேரம் கூட இலகுவாக இருக்க முடியவில்லை என கூறினார்.
ஸ்ரத்தா தேஷ்பாண்டே கூறியதாவது, பாடங்களில் பாலின சமத்துவம் குறித்து படிக்கிறோம். நல்ல மதிப்பெண்கள் பெறுகிறோம். ஆனால், அதனை நிஜ வாழ்வில் செயல்படுத்த தயங்குகிறோம். இந்த நிலை மாற வேண்டும். ஆண் - பெண் சமம் என்ற நிலை வரவேண்டும் என்று தேஷ்பாண்டே கூறினார்.