ஐரோப்பாவில் இருக்கும் மிகப் பெரிய பசுமை இல்லம் 80 கால்பந்து மைதானங்கள் அளவு பெரியது. இதனை வடிவமைத்த நிறுவனத்தின் பெயர் எம்ஸ் ஃபிளார். (Emsflower) டெம்ஸ் குய்ஃபர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரால் இந்த பசுமை இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து 'DW தமிழ்' யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
ஜெர்மனியில் இருக்கும் இந்த பசுமை இல்லத்தில் சுமார் 450 பேர் வேலை செய்கின்றனர். இந்த பசுமை இல்லம் இவ்வளவு வேகமாக வளர்ந்ததற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. சூழலியல்
இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சைக்கிளில் பயணிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தேனீக்கள் தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. லேடி பக்ஸ் போன்ற பூச்சிகள் ஆஃவிட் பூச்சிகளை சாப்பிடுகின்றன. இதனால் பூச்சி மருந்து தேவை குறைக்கிறது.
தானியங்கி செயல்முறைகள்
இங்கு இருக்கும் ரோபோக்கள் 1 மணி நேரத்தில் 15,000க்கும்மேற்பட்ட செடிகளை நடுகின்றன. பல் பொருள் அங்காடிகளில் வழங்கப்படும் தண்டுகளில் நேரடியாக செடிகள் வளர்க்கப்படுகின்றன. தானியங்கி ரயில்கள் பொருட்களை கொண்டு செல்கின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் வெறும் 2 கி.மீ தொலைவில் ஜெர்மனியில் இந்த பசுமை இல்லம் அமைந்துள்ளது. இதனால் பல ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு இங்கிருக்கின்ற பொருட்கள் மிக விரைவாக கிடைக்கின்றன.
எத்தியோப்பியாவில் உள்ள ஒரு பங்குதாரர் ஆலையில் இருந்து இங்கு வளர்க்கப்படும் செடிகள் வாங்கப்படுகின்றன.
4. இறுதியாக மூலாதராங்கள்
இங்கு கூரை மேல் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் ஒரு சிறிய நகரத்திற்கு போதுமான 100 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகின்றன. மரக் கழிவுகள் குளிர்காலத்தில் வெப்பத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இது எரிவாயுவை விட மலிவானது. மேலும் சுற்றுச்சூழலுக்கு சிறந்ததும் கூட. இங்கு மழை நீர் சேகரிக்கப்பட்டு உரத்துடன் கலக்கப்படுகிறது.
சிமெண்ட் தரைகள் முழுவதும் தண்ணீர் பாய்ச்சப்பட்டு மீண்டும் தொட்டியில் செலுத்தப்படுகிறது. இதனால் குழாய் நீரை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த செயல்களால் பணம், வளங்கள் சேமிக்கப்பட்டு அது அந்த நிறுவனத்தில் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”