ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற, முகத்தை சுத்தப்படுத்துவது அவசியம். சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் மற்றும் டெத் செல்களை நீக்கி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூழலை ஃபேஸ் வாஷ் உருவாக்குகிறது. ஆனால், இதற்காக கடைகளில் கிடைக்கும் ஸ்க்ரப்களை தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கெமிக்கல் இல்லாத இயற்கை ஃபேஸ் ஸ்க்ரப்பைத் தயாரிக்கலாம்.
காபி ஃபேஸ் ஸ்க்ரப்: இந்த இயற்கை ஸ்க்ரப் செய்ய, நம் சமையலறையில் இருக்கும் காபி தூள் போதும். காபி தூள் சிறந்த ஸ்க்ரப்பராகச் செயல்பட்டு, முகப்பரு மற்றும் அதன் தழும்புகளை நீக்குகிறது. மேலும், சருமத் துளைகளை சுத்தம் செய்து, முகத்திற்கு உடனடிப் பொலிவை அளிக்கிறது. காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் சேர்ப்பதன் மூலம், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்: காபி தூள், தேங்காய் எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காபி தூளுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் (Sensitive Skin) தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தேன் பயன்படுத்தலாம். இந்த ஸ்க்ரப்புடன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்தும் பயன்படுத்தலாம். காபி தூளுடன் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.