/indian-express-tamil/media/media_files/2025/06/25/eli-thollai-kitchen-tips-tamil-2025-06-25-14-20-33.jpg)
தக்காளியில் இந்த 3 பொருட்களை சேருங்க… வீட்டுப் பக்கம் எலி எட்டி பார்க்காது!
உங்கள் வீட்டில் எலித் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? எலிகளை அழிக்காமல், அவற்றை வீட்டை விட்டு நிரந்தரமாக விரட்டக்கூடிய வீட்டு வைத்தியம் குறித்து எவ சமையல் என்ற யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது. இது எலிகளைக் கொல்லாமல், அவை மீண்டும் வராதபடி செய்யக் கூடிய எளிய மற்றும் பயனுள்ள முறையாகும்.
வீட்டின் உணவுப் பொருட்கள், உடைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், தொலைக்காட்சி போன்ற மின்சாதனங்களின் கம்பிகள் என அனைத்தையும் எலிகள் சேதப்படுத்துகின்றன. கடைகளில் கிடைக்கும் மருந்துகள் எலிகளைக் கொன்றாலும், அவை எங்காவது மறைந்திருந்து இறக்கும்போது ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அவற்றை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம் தொல்லையாகும். இந்த வீட்டு வைத்தியம் எலிகளைக் கொல்லாமல், உங்கள் வீட்டிலிருந்து விரட்டி, இந்தத் தொல்லைகளைத் தவிர்க்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்: நன்கு பழுத்த தக்காளி, ஊதுபத்தி (மஞ்சள் அல்லது கருப்பு நிற ஊதுபத்தி பயன்படுத்தலாம்), தனி மிளகாய் தூள்(காரமான தனி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் கூடாது), நாட்டு சர்க்கரை.
செய்முறை: முதலில், ஒரு ஊதுபத்தியை நன்கு பொடி செய்து கொள்ளவும். கையால் நசுக்கலாம் அல்லது ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து இடிக்கல் அல்லது சுத்தியலால் தட்டி பொடி செய்யலாம். ஊதுபத்தியின் குச்சியைத் தூக்கி எறிந்துவிடவும். பழுத்த தக்காளியை பாதியாக வெட்டிக் கொள்ளவும். எலித்தொல்லை அதிகமாக இருந்தால், முழு தக்காளியையும் பயன்படுத்தலாம். வெட்டிய தக்காளியின் மீது, முதலில் ஊதுபத்திப் பொடியை சீராகத் தூவவும். அடுத்து, அதன் மீது ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூளை ஊதுபத்திப் பொடி மறையும்படி தூவவும். கடைசியாக, ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரையை மிளகாய் தூள் மீது பரப்பவும்.
தக்காளியின் புளிப்பு, ஊதுபத்தியின் மணம், மிளகாய் தூளின் காரம் மற்றும் நாட்டு சர்க்கரையின் இனிப்பு ஆகிய இந்த பொருட்கள் எலி உட்கொள்ளும்போது அதன் வயிற்றில் ஒருவித எதிர்வினையை உருவாக்குகின்றன. இது எலிக்கு அமிலத்தன்மை, செரிமானக் கோளாறு, மயக்கம் மற்றும் வயிற்று வீக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். இந்த கலவை எலியைக் கொல்லாது.
எலிகளுக்கு மனிதர்களைப் போலவே அதிக ஐக்யூ (IQ) அளவும், சிறந்த ஞாபக சக்தியும் உண்டு. ஒருமுறை இந்த கலவையை சாப்பிட்டு உடல்நல குறைபாட்டை உணர்ந்தால், அந்த குறிப்பிட்ட இடம் அல்லது வீட்டை ஆபத்தானதாகக் கருதி, மீண்டும் அந்தப் பக்கம் வர முயற்சி செய்யாது. இந்த தக்காளி கலவையை எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களில் வைக்கலாம். உதாரணமாக, சமையலறை, அறைகளின் மூலைகள், சேமிப்பு அறைகள், கார் அல்லது வாகனங்களின் டயர்களுக்கு அருகில் (கம்பிகளை கடிப்பதைத் தடுக்க), தோட்டத்தில் செடிகளைச் சேதப்படுத்தும் இடங்களில் வைக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.