/indian-express-tamil/media/media_files/2025/10/10/download-15-2025-10-10-16-40-20.jpg)
நமது வீடுகளில், குறிப்பாக சமையலறைகள் மற்றும் உணவு சேமிப்பு இடங்களில் எலிகள் பதுங்குவதும், உணவுகளை கடிப்பதும், கழிவுகள் ஊற்றுவதும், மக்கள் உடல்நலத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. லெப்டோஸ்பைரோசிஸ், ஹன்டா வைரஸ், சால்மொனெல்லா, பிளேக் போன்ற பலவிதமான அபாயகரமான நோய்கள் எலிகளின் மூலமாக பரவக் கூடியவை என்பதற்கான மருத்துவ ஆதாரங்களும் அதிகமாக உள்ளன.
பள்ளி குழந்தைகள் இருக்கும் வீட்டில், எலிகள் உருட்டிய பாத்திரங்களில் அவர்கள் உணவருந்தும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், மின்கம்பிகளை, முக்கியமான உபகரணங்கள் இணைக்கப்பட்ட வயர்களை கடிப்பதும், நுகர்வோருக்கு பொருட்சேதத்தையே அல்லாமல் தீவிர மின்சாதன பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது தீ விபத்திற்கும் காரணமாகலாம்.
இவ்வாறான எலி தொல்லைக்கு பலர் ரசாயனமிக்க விஷம், கட்டி வைக்கும் முறைகள், எலி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். சந்தையில் கிடைக்கும் பலவிதமான எலி மருந்துகள் உடனடி பலனைத் தரக்கூடியவை போல் தெரிந்தாலும், அவை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். விஷம் கலந்த உணவுகளை தவறுதலாக வீட்டு நாய்கள், பூனைகள் அல்லது குழந்தைகள் எடுத்து விட்டால் அதனால் விஷவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சில ரசாயன மருந்துகள் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
ஒரு சிம்பிள் டிப்!
எலிகளை விரட்டுவதற்கு இரசாயனங்கள் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்தே விரட்டலாம். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க. பூண்டுக்கும் சிவப்பு மிளகாயுக்கும் எலிகளை வெறுக்கும் துர்நாற்றமும் தீவிர தன்மையும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை வைத்து எளிய வீட்டுப்பயன்பாட்டு நிவாரணத்தை உருவாக்கலாம்.
வர மிளகாய் விதைகளை எங்கெங்கு எலிகள் நடமாடுகிறதோ அங்கேயெல்லாம் தூவி விடலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் பூண்டு துண்டுகளையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு பிறகு அந்த தண்ணீரை மற்றும் ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, எலிகள் வரக்கூடிய இடங்களில் — பந்தலின் பின்புறம், அடுக்குகள், மரக்கூடுகள், வீதி ஓரங்கள் போன்ற இடங்களில் — தெளிக்கவும். இந்த கலவையை தினசரி ஒருமுறை தெளித்தால் சிறந்த பலனை அளிக்கும். துர்நாற்றம் காரணமாக சமையலறை அல்லது உணவு வைக்கும் இடங்களில் அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
பூண்டு மற்றும் சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தி எலிகளை விரட்டுவது ஒரு பழங்கால பாரம்பரிய முறை. இது பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.