ஆரோக்கியம் மற்றும் சுவையான நெய் பிஸ்கட் வீட்டிலேயே செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நெய்- 200 கிராம்
மைதா- 400 கிராம்
சர்க்கரை-200 கிராம்
பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை டீஸ்பூன்
ரீபைண்ட் ஆயில்- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதனை கீரிமியான அளவுக்கு நன்றாக் பீட் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் கிரீம் அளவுக்கு பீட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மைதா மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு, வாசனை இல்லாத ரீபைண்ட் ஆயில், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து அதனை ஒரு அரை மணிநேரத்திற்கு மூடி போட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த மாவினை எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை உருண்டைகளாக உருட்டி தட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்து அதனை ஒரு பிளேட்டில் வைக்க வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆனதும் அதில் பிஸ்கெட்டுகளை வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான நெய் பிஸ்கெட் தயார். அவ்வளவு தான் குழந்தைகள், வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து சுவைத்து பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“