/indian-express-tamil/media/media_files/2025/01/07/VRwfko4OQ2noxZjqnul3.jpg)
Ghee
நெய் ஒரு பழமையான அதிசய மருந்து. இது பல ஆயுர்வேத வைத்தியம் மற்றும் பண்டைய மருந்துகளின் இன்றியமையாத பகுதியாகும். அதிகாலையில் ஒரு டீஸ்பூன் நெய், மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்யும் என்று ஆயுர்வேத வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது பாரம்பரியமாக அதிகாலையில் ஒரு மருந்தாக உட்கொள்ளப்பட்டு, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது, உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது.
நெய் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும், இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், எடையை நிர்வகிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் வழக்கமாக நெய் உட்கொள்வது உடலுக்கு ஒரு ‘ரச’மாக செயல்படுகிறது. நெய் உடலின் உயிரணுக்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதாரமாக செயல்படுகிறது மற்றும் செல் சேதத்தை மாற்றியமைக்க உதவுகிறது, குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
நெய்யில்’ பியூட்ரிக் அமிலம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருப்பதால், பிடிவாதமான கொழுப்பை உடலிலிருந்து வெளியேற்றி, நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, என்று ஆயுர்வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும் உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் உணவில் அதிகமாக எண்ணெய், நெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால் அது உண்மை தானா?
ஆனால் அப்படி எல்லாம் கிடையாது, என்கிறார் டாக்டர் செல்வ சண்முகம்.
டாக்டர் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த அவர் பேட்டியில், ’ நெய், நம் உணவில் தாராளமாக சேர்க்கலாம். காலை உணவுடன் 3 தேக்கரண்டி, மதிய உணவுடன் 3 தேக்கரண்டி நெய் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.
50 வயதை தாண்டியவர்கள் 3 தேக்கரண்டிக்கு பதிலாக 4 தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமாக தயாரிக்கப்பட்ட பசுநெய் தினமும் எடுத்துக் கொண்டால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.
சர்க்கரை வியாதி, இதய நோய், உடல் பருமன், கொழுப்பு சம்பந்தபட்ட பிரச்னை உள்ளவர்கள் உள்பட அனைவருமே போதுமான அளவு நெய் சாப்பிடலாம். தரமாக தயாரிக்கப்பட்ட நெய் ஒரு அமுது, என்றார் டாக்டர் செல்வ சண்முகம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.