Ghee Rice Recipe, Ghee Rice Tamil Video: தீபாவளியை முன்னிட்டு சமையலறையில் அதிக நேரம் செலவிட்டு இருப்பீர்கள். இனி ஓரிரு நாட்களுக்கு சற்றே ரிலாக்ஸ்டாக சிம்பிளான உணவுப் பொருட்களை செய்வோம் என தோன்றுவது இயற்கை.
Advertisment
சிம்பிளான உணவாக இருந்தாலும், சத்தான உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கிற உணவாக இருக்க வேண்டும். இந்த வகையில் நீங்கள் நெய் சாதத்தை தேர்வு செய்யலாம். டேஸ்டியான நெய் சாதம் எப்படி செய்வது? என இங்குக் காணலாம்.
Ghee Rice Tamil Video: நெய் சாதம்
Advertisment
Advertisements
நெய் சாதம் செய்யத் தேவையான பொருட்கள் : பொன்னி அரிசி - கால் கிலோ, நெய் - 100 கிராம், பட்டை - 3 துண்டுகள் (சிறியது), கிராம்பு - 4, ஏலக்காய் - 2, பூண்டு - 7 பல், பிரியாணி இலை - 1, கறிவேப்பிலை - ஒரு கொத்து, முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் சாதம் செய்முறை :
முதலில் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயையும் லேசாக தட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும். அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.
பிறகு இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கினால் டேஸ்டியான நெய் சாதம் தயார். இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா பொருத்தமாக இருக்கும்.
வளர்கிற குழந்தைகளுக்கு நெய் உணவு அவசியம். எனவே இந்த உணவை மிஸ் பண்ணாதீங்க!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"