ghee rice recipe nei soru ghee rice tamil : பொதுவாக நெய் சோறு செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவியைத் தொட்டுக் கொள்வோம்.
Advertisment
மணக்கும் நெய் சோறு தயார். பயன்கள். நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான்.தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:-
Advertisment
Advertisements
பாசுமதி அரிசி - 2 கப்
முந்திரி - 10
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை -2
கிராம்பு - 2
நெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:- பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதத்தை வடித்து கொள்ளவும். வடித்த பிறகு ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும்.அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். பிறகு அதலில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும். பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்..