குறிப்பிடத்தக்க உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன், சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது என்று தரம்ஷிலா நாராயணா சிறப்பு மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் பயல் சர்மா கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Why begin your mornings with a spoonful of ghee?
காலையில் நெய் சாப்பிடுவது நல்லதா?
பல பிரபலங்கள் காலையில் நெய் அல்லது தெளிந்த வெண்ணெய் சாப்பிடுவதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த சிறிய உணவுமுறை மாற்றங்கள் உங்கள் உணவு இலக்குகளுக்கு எவ்வாறு உதவுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அத்தகைய மாற்றத்தின் பலன் என்ன, நீண்ட காலத்திற்கு இது நல்லதா என்று நிபுணர்களிடம் கேட்க முடிவு செய்தோம்.
தரம்ஷிலா நாராயணா சிறப்பு மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் பயல் ஷர்மா, நெய்யுடன் உங்கள் நாளைத் தொடங்குவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்றார். “நெய் அல்லது பால் திடப்பொருட்களை அகற்றிய தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய், நிறைவுற்ற கொழுப்புகளில் நிறைந்துள்ளது, இது நாள் முழுவதும் நிலையான ஆற்றலை வழங்க முடியும். இதில் நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எளிதில் ஜீரணிக்கக்கூடியவை மற்றும் விரைவாக வளர்சிதை மாற்றமடைந்து, மனநிறைவு உணர்வை ஊக்குவிக்கின்றன” என்று சர்மா கூறினார்.
நெய் கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, இ மற்றும் டி ஆகியவற்றின் ஆதாரமாகும். இது ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு, தோல் ஆரோக்கியம் மற்றும் எலும்பு வலிமைக்கு பங்களிக்கிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன என்று சர்மா கூறினார்.
நெய்யின் தனித்துவமான கலவை நீரிழிவு நோயை நிர்வகிக்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது என்று உணவியல் நிபுணரும் சான்றளிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளருமான டாக்டர் அர்ச்சனா பத்ரா கூறினார். “இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, நாள் முழுவதும் ஆற்றலை ஒரு நிலையான வெளியீட்டை வழங்குகிறது. மேலும், நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம், குடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது” என்று டாக்டர் அர்ச்சனா பத்ரா கூறினார்.
உங்கள் காலைப் பழக்கத்தில் நெய்யைச் சேர்த்துக்கொள்வது குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தையும் ஆதரிக்கலாம். “நெய்யில் உள்ள ப்யூட்ரிக் அமிலம் குடல் புறணிக்கு ஊட்டமளிக்கும் என்று கருதப்படுகிறது, இது செரிமான பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது” என்று சர்மா கூறினார்.
ஒரு பல்துறை சமையல் மூலப்பொருளாக, நெய், சிற்றுண்டியில் தூவுவது முதல் உங்கள் காலை ஓட்மீலில் ஒரு ஸ்பூன் அளவு சேர்ப்பது வரை பலவிதமான காலை உணவு விருப்பங்களை நிறைவு செய்கிறது என்று டாக்டர் அர்ச்சனா பத்ரா பகிர்ந்து கொண்டார்.
நெய் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பிடத்தக்க உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.