மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் அரையிறுதி போட்டி வரை முன்னேறிய கிருத்தி திமான், தான் தினசரி வெறும் வயிற்றில் வெந்நீருடன் நெய் கலந்து குடிப்பதால், தனது உடலில் பல்வேறு மாற்றங்களை உணர்வதாக தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Here’s what happens to the body if you have ghee water on an empty stomach daily
* தனது சருமம் முன்பு இருப்பதை விட தற்போது மிகவும் பொலிவாக காணப்படுவதாகவும், நீர்ச்சத்து போதுமான அளவில் இருப்பதாக தான் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* தனது முடியும் அடர்த்தியாக வளர்வதாக கிருத்தி திமான் தெரிவித்துள்ளார். தனது முடியின் வேர்க்கால்கள் வலுவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
* தினசரி வெந்நீருடன் நெய் கலந்து குடித்த பின்னர், தனது செரிமான மண்டலம் சீராக இயங்குவதாக கிருத்தி திமான் குறிப்பிட்டுள்ளார்.
* நெய்யை இவ்வாறு சாப்பிடுவதால் காலை உணவிற்கு பின்னர், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வெந்நீருடன் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வல்லுநர்களிடம் விளக்கம் கேட்டோம். அதன்படி, "நெய்யை இவ்வாறு உட்கொள்வது உடல் எடைக் குறைப்பிற்கு உதவி செய்யும். மலச்சிக்கலை நீக்கி, சீரான செரிமானத்திற்கு வழிவகுக்கும். சருமத்தில் உள்ள கொலஜன் உற்பத்தியில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஆற்றலை அளிக்கிறது" என மருத்துவர் ஜினால் பட்டேல் தெரிவித்துள்ளார்.
"வெந்நீருடன் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பின்பற்றப்படும் முறை" என்று மருத்துவர் பிரலி ஸ்வேதா குறிப்பிட்டுள்ளார்.
"நெய்யில் நிறைந்திருக்கும் பியூட்ரிக் அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நம் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இது அன்டி இன்ஃப்ளமேட்டரி காரணியாக பணியாற்றுகிறது" என்றும் மருத்துவர் பிரலி ஸ்வேதா தெரிவித்துளார்.
"எனினும், நெய்யில் சச்சுரேட்டட் ஃபேட்ஸ் காணப்படுகிறது. எனவே, இதனை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றை தவறாக எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்" என மருத்துவர் பிரலி ஸ்வேதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு நெய்யை வெந்நீருடன் சேர்த்து எடுத்துக் கொள்வதாக் ஏற்படும் நன்மைகளை விளக்குவதற்கு போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை எனக் கூறும் வல்லுநர்கள், மருத்துவர்களின் அறிவுரையின் படி இதனை எப்படி பயன்படுத்துவது எனக் கேட்டறிந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.