கன்னியாகுமரி ’மட்டி’ ரக வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
Advertisment
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக கன்னியாகுமரி இருந்த போது திருவிதாங்கூரின், நெற்களஞ்சியமாக கன்னியாகுமரி இருந்தது. குமரிக்கு நாஞ்சில் நாடு என்ற இன்னொரு பெயர் வருவதற்கு இதுதான் காரணம்..
நாஞ்சில் நாட்டில் நெல் வயல்கள் அதிக பரப்பளவில் இருந்த போதும், குமரியில் வாழை, தென்னை விவசாயமும் இன்றும் செழிப்பாக திகழ்கிறது.
மட்டி,செவ்வாழை, ஏத்தன் பழம் (நேந்திரம்) வாழைப்பழம் குமரியில் பிரபலம்
அதிலும் மட்டி வாழைப்பழம் மருத்துவ குணத்துடன் சுவையும் நிறைந்த பழம்.. பிறந்த குழந்தைக்கு கூட ஊட்டும் ஒரே பழம்.
நாஞ்சில் நாட்டில் மட்டுமே விளையும் மட்டி ரக வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது, தென் கோடி குமரிக்கு கிடைத்திருக்கும் இன்னொரு புகழ்.
செய்தி: த.இ.தாகூர், கன்னியாகுமரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil