கருமையான நீண்ட தலைமுடிக்கு இந்த எண்ணெய்கள் அவசியம் – ‘கில்லி’ புகழ் ஜெனிஃபர் டிப்ஸ்

Nancy Jenifer hair growth tips குளிப்பதற்கு இரண்டு அல்லது ஒருமணி நேரத்திற்கு முன்னதாக எண்ணெய் அப்ளை செய்து, நன்கு மசாஜ் கொடுத்தபிறகு குளிக்கச் செல்வது நல்லது.

Gilli fame Nancy Jenifer Beauty Tips hair growth tips Tamil
Gilli fame Nancy Jenifer hair growth tips Tamil

Gilli fame Nancy Jenifer Beauty Tips hair growth tips Tamil : ‘நேருக்கு நேர்’, ‘டைம்’, ‘கில்லி’ உள்ளிட்ட  திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி, தற்போது பல சின்னத்திரை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் ஈவன்ட்டுகளிலும் பிசியாக இருக்கும் ஜெனிஃபர், தன் நீண்ட தலைமுடிக்கான சீக்ரெட்டை பகிர்ந்துகொண்டார்.

Jenifer

“நீளமாக முடி வளர சிலர் இரவு நேரங்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து, காலையில் அலசுவார்கள். எண்ணெய் தேய்த்தால், முகப் பருக்கள் அதிகம் வருகிறது என்று சிலர் பயப்படுவார்கள். இரண்டுமே தவறு. குளிப்பதற்கு இரண்டு அல்லது ஒருமணி நேரத்திற்கு முன்னதாக எண்ணெய் அப்ளை செய்து, நன்கு மசாஜ் கொடுத்தபிறகு குளிக்கச் செல்வது நல்லது.

நான் பொதுவாகவே ஷாம்பு அவ்வளவாக உபயோகிக்க மாட்டேன். எங்கள் வீட்டிலேயே செய்யப்படும் ஷிகக்காய்தான் உபயோகிப்பேன். எண்ணெய் தேய்த்து, ஷிகக்காய் பயன்படுத்தும்போது எண்ணெய்யில் உள்ள நன்மைகள் முழுமையாக சென்றுவிடாது. அப்படியே தலையிலேயே இருக்கும்.

எந்த அளவிற்கு கெமிக்கல் பொருள்களை உபயோகிப்பதைத் தவிர்க்கிறோமோ அந்த அளவிற்கு உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய்கள் இருந்தாலும், அதில் ஆல்மண்டு எண்ணெய் மிகவும் நல்லது. ஆனால், நான் வீட்டிலேயே தயாரிக்கப்படும் எணெய்யைதான் பயன்படுத்துவேன். அதில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய்  மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவை கலந்து இருக்கும். 500 கிராம் தேங்காய் மற்றும் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் 50 கிராம் விளக்கு மற்றும் வேப்பெண்ணெய் கலந்து நன்கு காய்த்து, ஆறவைத்து உபயோகிக்கலாம்.

இந்த எண்ணெய்கள் அனைத்தும் மரச்செக்கால் எடுக்கப்பட்டவை என்றால் இன்னும் நன்மைகள் அதிகம். அதேபோல எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதற்கு முன்பு, எண்ணெய்யை மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்கலாம். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, தலைமுடியையும் வலுவாக்கும்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gilli fame nancy jenifer beauty tips hair growth tips tamil

Next Story
இன்ஜினியர் டூ ஆக்டர்… வானத்தை போல துளசி பர்சனல் ஃபுரோபைல்vanathai pola swetha khelge thulasi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express