விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு இன்று ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு இரண்டு லட்சத்து 51 ஆயிரம் கண்ணாடி வளையலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ளது மேல்மலையனூர். இந்த ஊரில் அமைந்துள்ள அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு இன்று சுமார் 2 லட்சம் 51 ஆயிரம் வளையல்களை கொண்டு உற்சவர்,மற்றும் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
இதனையொட்டி, திரளான பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் ஆடிப்பூரம் முடிந்த பிறகு செஞ்சி அங்காளம்மன் கோவிலுக்கு ஒரு பக்தர்களுக்கு இந்த வளையல்களை பிரசாதமாக வழங்கப்பட உள்ளனர். எப்போதுமே அங்காளம்மன் கோவிலுக்கு அம்மாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் மிக சிறப்பு பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அம்மாவாசை அன்று மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அர்ச்சனை செய்வது வழக்கம் அதேபோன்று ஆடிப்பூரத் இன்று சிறப்பு பூஜையில் அம்மன் பக்தர்கள் காட்சி அளித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.