இஞ்சியில் இத்தனை நன்மைகளா! தெரிஞ்சுக்கோங்க; 10 நிமிடத்தில் சட்னி செய்து சாப்பிடுங்க

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க

உடல், வயிறு ஆரேக்கியத்திற்கு உதவும் இஞ்சி சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – அரை கப் (நறுக்கியது)

Advertisment
Advertisements

வெங்காயம் – 2  

பச்சை மிளகாய் – 6

காய்ந்த மிளகாய் – 6

புளி – 2 துண்டு

தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – அரை கப்

உப்பு – 1 ஸ்பூன்

வெல்லம் – சிறிதளவு 

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

பெருங்காய தூள் –  1 ஸ்பூன்

கறிவேப்பில்லை –  சிறிதளவு 

செய்முறை 

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.  

உப்பு சேர்த்து கிளறி ஆற வைத்து  அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். இப்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். கடைசியாக அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கவும். 

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்க வேண்டும். இப்போது இதை சட்னியில் சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான இஞ்சி சட்னி தயார்.

இஞ்சி பெரும்பாலும் செரிமானத்துக்கு உதவக்கூடிய ஒன்றாக உள்ளது. இஞ்சி சட்னி சாப்பிட செரிமான கோளாறுகள் நீங்கி, வயிறு சீராகும். இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அதோடு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: