காய்கறியே இல்லாமல் இட்லி- தோசைக்கு சைடு டிஷ்: இதுதான் ரொம்ப ஹெல்த்தி

இஞ்சி பூண்டு சட்னி ரெசிபி இங்கே உள்ளது.

இஞ்சி பூண்டு சட்னி ரெசிபி இங்கே உள்ளது.

author-image
WebDesk
New Update
chutney

Chutney Recipe

இட்லி தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி, வேர்கடலை சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டு சலித்து விட்டதா? இஞ்சி பூண்டு சட்னி ரெசிபி இங்கே உள்ளது. இது இட்லி- தோசைக்கு பர்ஃபெக்ட் சைட் டிஷ் ஆக இருக்கும்.

Advertisment

இஞ்சி பூண்டு சட்னி எப்படி செய்வது என்பது இங்கே…

தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 கப்

Advertisment
Advertisements

பூண்டு - 15 பல்

புளி - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 10

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு - சிறிதளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெல்லம் - சிறிய துண்டு

எப்படி செய்வது?    

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, உப்பு, புளி, காய்ந்த மிளகாய் அனைத்தையும் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் கடாயை அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆறவிடவும்.         

இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு, வெல்லம், தண்ணீர் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

இதை துவையல் போல அரைக்கலாம் அல்லது தண்ணீர் அதிகம் சேர்த்து சட்னி வைக்கலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து இதில் ஊற்றவும்.

சுவையான இஞ்சி பூண்டு சட்னி தயார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: