சுவையான இஞ்சி, பூண்டு சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இஞ்சித் துண்டுகள் – 1 கப்
பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 10
புளி – தேவைக்கு ஏற்ப
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறதளவு
வெல்லம் – சிறிய துண்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி கலவையை ஆற வைக்கவும்,
மிக்ஸி ஜார் எடுத்து ஆற வைத்த கலவையை போட்டு உப்பு, சிறிதளவு வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இப்போது அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த கலவையில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான இஞ்சி, பூண்டு சட்னிதயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“