பொடுகு, தலைஅரிப்பு பாடாய்படுத்துகிறதா? இருக்கவே இருக்கு இஞ்சி - இனி பொடுகு அஞ்சி ஓடும்...

Ginger acts as skin care : மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.

Ginger acts as skin care : மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
skin care, head massage, Dandruff, itchy, ginger,control

skin care, head massage, Dandruff, itchy, ginger,control, ,பொடுகு,அரிப்பு, இஞ்சி, சரும பராமரிப்பு

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். அதாவது இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்னைக்களுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.

Advertisment

இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் அதிகமுள்ளதனால் செரிமான கோளாறு, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்த முடியும். அத்தோடு இஞ்சி வலி நிவாரணியாகவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆசிய சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகக் கருதப்படும் இஞ்சி , உடலில் ஏற்படும் அலர்ஜியை தடுக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பொடுகு மற்றும் தலைஅரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர்மாஸ்க்

Advertisment
Advertisements

இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும்.

பொடியாக நறுக்கிய அல்லது துருவிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் அவிய விட வேண்டும். சிறிது நேரத்தில் மஞ்சள் நிறத்தில் தண்ணீரின் நிறம் மாறத்தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிக்கட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் இந்த இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்துங்கள்.

இந்த மாஸ்க்கை அரை மணி முதல் 1 மணிநேரம் வரை தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்த்து தலை முடியையை கழுவுங்கள்.

இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து வர, தலை அரிப்பும் குறைந்து விடும். மேலும் அன்றாடம் தலைக்க எண்ணேய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம்.

Beauty Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: