ஒரு முறை இஞ்சி குழம்பு, இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கால் கப் இஞ்சி
கால் கப் தேங்காய்
2 கொத்து கருவேப்பிலை
2 ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் சீரகம்
15 சின்ன வெங்காயம்
10 பல் பூண்டு
1 தக்காளி
2 பச்சை மிளகாய்
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் மல்லித்தூள்
உப்பு
எலுமிச்சை அளவு புளி
1 கப் தண்ணீர்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய இஞ்சியை சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் தேங்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். பூண்டு சேர்த்து கிளரவும். தக்களியை சேர்த்து கிளரவும். பச்சை மிளகாய் சேர்க்கவும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லுத்தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும் தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.