இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்நிலையில் நம்மில் பலர் வயிறு உப்புதல், அஜீரணம், பசி இழப்பு உள்ளிட்டவை ஏற்படும். இந்நிலையில் வயிறு உப்புதல் ஏற்படுவதற்கு அஜீரணம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் இஞ்சி இதை குணமாக்கும். இஞ்சியில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் உள்ளது. வாயுத் தொல்லையால் ஏற்படும் வலியை இஞ்சி குணமாக்க உதவும். இதனால் ஜீரண பிரச்சனைகள் குறையும். அதிகபடியான கழிவுகளை குறைக்கும்.
இந்நிலையில் இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
2 இஞ்சி துண்டுகள்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை : ஒரு கண்ணாடி ஜாரில் இஞ்சி துண்டுகள், எலிமிச்சை, உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
இந்நிலையில் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் இஞ்சி துண்டுகளை நாம் சாப்பிட வேண்டும். காலை உணவுடன் இதை சாப்பிடக் கூடாது.
இஞ்சியில் ஜிஞ்ஜரால் உள்ளது. இது வாந்தி, வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது. இஞ்சியில், நமது உமிழ்நீரை தூண்டும் பண்புகள் உள்ளது. மேலும் ஜீரணிக்கும் என்சைம்கள் உள்ளது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் எலுமிச்சை சாறில் உள்ளது. இவை இரண்டும் சேருவதால் நமது ஜீரண வழித் தடத்தை மேலும் மிரதுவாக்கும். இது ஒட்டுமொத்த மெட்டபாலிசத்தை தூண்டு, அதிகபடியான பசியை குறைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“