ரொம்ப ருசியான இஞ்சி துவயல், இப்படி செய்யுங்க. 15 நிமிசங்களுக்குள் ரெடி செய்து விடலாம்
தேவையான பொருட்கள்
இஞ்சி – 50 கிராம்
மிளகாய் வத்தல்- 4
கடலை பருப்பு- 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 2
உப்பு தேவையான அளவு
வெல்லம் சிறிய அளவு
புளி சிறிய நெல்லிக்காய் அளவு
சீரகம்
கறிவெப்பிலை
நல்லெண்ணைய்- டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் சிறிய அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், கடலை பருப்பு சேர்த்து வறுத்துகொள்ளவும். தொடர்ந்து அதில் உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும், நிறம் மாறியதும், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும். தொடர்ந்து வறுத்த பொருட்களுடன், புளி, உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். இந்த துவையலில், எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, காயப்பொடி சேர்த்து கொட்டவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“